கர படத்தில் மமிதாவை நடிக்கவைத்தது ஏன்? விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் விக்னேஷ் ராஜா!
Vignesh Raja About Kara Movie Actress selection: தமிழில் வித்தியாசமான திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ள திரைப்படம்தான் கர. இதில் தனுஷ் மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடித்திருக்கும் நிலையில், இப்படத்தில் மலையாள நடிகையான மமிதாவை நடிக்க வைத்ததற்கான காரணம் பற்றி இயக்குநர் விக்னேஷ் ராஜா விளக்கம்.

கர திரைப்படம்
தமிழில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான போர் தொழில் (Por Thozhil) என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக நுழைந்தவர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja). அதிரடி க்ரைம் திரில்லர் பாணியில் வெளியான இப்படம், தமிழில் இவருக்கு மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை கொடுத்திருந்தது. இப்படத்தை அடுத்ததாக இவர் இணைந்து இயக்கியுள்ள இரண்டாவது படம்தான் கர (Kara). இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் (Dhanush) கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் ஜன நாயகன் (Jana Nayagan), டியூட் (Dude) போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கதாநாயகியாக இவர் நடித்துள்ள பிரம்மாண்ட தமிழ் படம்தான் கர. இந்த படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
அந்த வகையில் இப்படத்தின் விளம்பர பணிகளும் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் இந்த கர படத்தில் மலையாள நடிகையை, நிறமாற்றம் செய்து நடிக்கவைத்தது ஏன் என்ற கேள்விக்கு, இயக்குநர் விக்னேஷ் ராஜா விளக்கம் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் மோகன்லாலின் 366-வது படத்தின் டைட்டில் இதுதான் – வைரலாகும் போஸ்டர்
கர படத்தில் நடிகை மமிதா பைஜூவை நடிக்கவைத்த காரணம் பற்றி விக்னேஷ் ராஜா:
அந்த நேர்காணலில் இயக்குநர் விக்னேஷ் ராஜா பேசுகையில், “படத்தில் நடிகைகளை தேர்ந்தெடுப்பதில் இரு ரூல்ஸ் இருக்கிறது. ஒன்று நடிப்புத் திறன் , மற்றொன்று மிகவும் பேமஸ். நான் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பேன். கதாபாத்திரங்களுக்கு உண்மையாகவே நியாயம் செய்யக்கூடிய நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதில் நான் மிகவும் கவனமாக இருப்பேன்.
இதையும் படிங்க: சாய் பல்லவி இந்தியில் அறிமுகம் ஆகும் ஏக் தீன் படத்தின் ட்ரெய்லர் வெளியானது
மேலும் கர படத்திற்காக பிரபலம் மற்றும் புதுமுகங்கள் கொண்ட கிட்டத்தட்ட 20 -25 பெண்களுக்கு ஆடிஷன் நடத்தியிருந்தோம். ஆனால் அந்த ஆடிஷனில் மமிதா செய்த விஷயத்தை, மற்ற யாராலும் நெருங்ககூட முடியவில்லை. மலையாள நடிகைகளை தமிழில், டேர்ன் மேக்கப் போட்டு நடிகை வைக்கிறார்கள் என நிறைய விவாதங்கள் இருக்கிறது. மேலும் என்னிடமே இன்ஸ்டாகிராமில் பலரும் இதுகுறித்து கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
கர திரைப்படம் குறித்து இயக்குநர் விக்னேஷ் ராஜா வெளியிட்ட பதிவு:
Thank you sir 🙏Thanks for everything 🙂 https://t.co/Txb2mxuEfx
— Vignesh Raja (@vigneshraja89) April 15, 2026
இந்த கர படத்தில் நடிகர்கள் தனுஷ் மற்றும் மமிதா பைஜுவுடன், சுராஜ் வெஞ்சாரமூடு, ஜெயராம், கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியில் வெளியாகிறது. அதை முன்னிட்டு இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி வரும் 2026 ஏப்ரல் 19ம் தேதியில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.