தனுஷ் 56 படம் குறித்து அப்டேட் கொடுத்த இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து

Director Tamizharasan Pachamuthu about Dhanush 56 Movie: தமிழ் சினிமாவில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து அடுத்ததாக நடிகர் தனுஷின் 56-வது படத்தை இயக்க உள்ளார். அந்தப் படம் குறித்து இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து முக்கிய அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

தனுஷ் 56 படம் குறித்து அப்டேட் கொடுத்த இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து

தமிழரசன் பச்சைமுத்து

Published: 

04 Mar 2026 14:55 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் லப்பர் பந்து. இந்தப் படத்தை இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து (Director Tamizharasan Pachaimuthu) எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தின் மூலமாக தமிழரசன் பச்சைமுத்து தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றி தமிழரசன் பச்சைமுத்துவை தென்னிந்திய சினிமவில் அதிக அளவில் பிரபலப்படுத்தியது. இந்த நிலையில் லப்பர் பந்து படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து எந்த நடிகரை வைத்து படம் இயக்க உள்ளார் என்று ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.

இந்த நிலையில் அவர் நடிகர் தனுஷை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்துவும் பல இடங்களில் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது 54-வது படமான கர படத்தினை முடித்துவிட்டு தற்போது 55-வது படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைப்பெற்ற நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

தனுஷ் 56 படம் குறித்து அப்டேட் கொடுத்த தமிழரசன் பச்சைமுத்து:

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் தமிழரசன் பச்சைமுத்து தற்போது தனது 55-வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையி இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் ”கெளம்பியாச்சு” என்று தெரிவித்துள்ளார். இது தனுஷ் 55 படத்தின் பணிகள் தொடங்கிவிட்டது என்பதை அவர் அறிவித்துள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

Also Read… பராரி பட இயக்குநருடன் புது படத்தில் கைகோர்த்த சந்தானம்.. கதாநாயகி யாருனு தெரியுமா?

இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இணையத்தில் வைரலாகும் புருஷன் பட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ