Sirai Movie: மிகவும் உண்மையானதாகவும் அசலாகவும் உணர்ந்தேன்.. சிறை படத்திற்கு விமர்சனம் கொடுத்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து!
Tamizharasan Pachamuthu: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் தமிழரசன் பச்சமுத்து. இவர் கடந்த 2024ம் ஆண்டில் வெளியான லப்பர் பந்து என்ற படத்தின் மூலம் பிரபலமானார். இந்நிலையில் இவர், நடிகர் விக்ரம் பிரபுவின் சிறை படத்தை பார்த்த நிலையில் அந்த படத்திற்கு ரிவியூ கொடுத்துள்ளார்.

தமிழரசன் பச்சமுத்து
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து (Tamizharasan Pachamuthu) கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் இயக்குநராக இருந்துவருகிறார். இவரின் இயக்கத்தில் கடந்த 2024ம் ஆண்டில் வெளியான படம் லப்பர் பந்து (Lubber Pandhu). சிறு பட்ஜெட்டில் வெளியான இப்படம், ஒட்டுமொத்த மக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட 1 வருடத்தை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரபல நடிகருடன் புது படத்தில் இணையவுள்ளார். அந்த நடிகர் வேறு யாராயுமில்லை, நடிகர் தனுஷ் (Dhanush) தான். தனுஷின் 57வது படத்தை இவர் இயக்கவுள்ளார் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த படம் குறித்த இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து அப்டேட் கொடுத்த நிலையில், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது இந்த புது படத்தின் ப்ரீ- ப்ரொடக்ஷன் வேலையில் இவர் ஆழ்ந்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விக்ரம் பிரபுவின் (Vikram Prabhu) நடிப்பில் வெளியான சிறை (Sirai) படத்தைப் பார்த்துள்ளார். அந்த வகையில் இப்படத்திற்கு முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஒரு பேரே வரலாறு பாடல்
சிறை படத்திற்கு விமர்சனம் கொடுத்த தமிழரசன் பச்சமுத்து :
அவர் சிறை படத்தை பற்றி கூறியது என்னவென்றால், “நான் சிறை படத்தை பார்தேன், இந்த படம் மிகவும் உண்மையானதாகவும் அசலாகவும் உணர்ந்தேன். மேலும் இந்த படத்தின் எழுத்து மற்றும் விரிவாக்கத்தை இயக்குநர் தமிழ் அண்ணன் நன்றாகவே எழுதியுள்ளார். நடிகர் விக்ரம் பிரபு இப்படத்திற்கு ஒரு சிறந்த மதிப்பை கொடுத்துள்ளார். மேலும் இப்படத்தில் அறிமுகமான அக்ஷய் குமாருக்கும் மற்றும் இயக்குநர் சுரேஷ் ராஜேஸ்வரிக்கும் எனது வாழ்த்துக்கள். மேலும் படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள்” என தமிழரசன் தெரிவித்துள்ளார்.
சிறை படம் குறித்து இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Watched SIRAI..
Felt so real and original 👌❤️superb writing and detailing @directortamil77 brother..👌👌@iamVikramPrabhu sir you add a great value to this project
Great debut by lead @lk_akshaykumar and director #SureshRajakumari 💐❤️
Ayya @philoedit kalakkunga❤️👍…
— Tamizharasan Pachamuthu (@tamizh018) December 20, 2025
இந்த சிறை படத்தில் விக்ரம் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்க, அறிமுக நடிகர் அக்ஷய் குமார் லீட் ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதையை இயக்குநர் தமிழ் எழுத, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜேஸ்வரி இயக்கியுள்ளார்.
இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையைப் பெற்ற ஜூ தமிழ்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷேன் ரோல்டன் இசையமைத்துள்ள நிலையில், முற்றிற்க்கும் ஆக்ஷ்ன் கலந்த காதல் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படமானது வரும் 2025 டிசம்பர் 25ம் தேதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.