Sundar C: தலைவர் 173 படத்திற்காக நான் எழுதிய கதை இப்படிதான் இருந்தது – சுந்தர் சி பேச்சு!
Sundar C About Thalaivar 173 Movie Story: கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகராகலாவும், இயக்குநராகவும் இருந்துவருபவர் சுந்தர் சி. இவர் ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு, பின் விலகிவிட்டார். அந்த வகையில் ரஜினிக்காக அவர் எழுதிய கதை எவ்வாறு இருந்தது எனது குறித்து சுந்தர் சி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் சுந்தர் சி
இயக்குநர் சுந்தர் சி (Sundar C), தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான ஜானரில் படங்களை இயக்கிவருகிறார். இவர் வெறும் இயக்குநராக மட்டுமில்லாமல், அவர் இயக்கும் படங்களில் முக்கியமான வேடங்களிலும் நடித்துவருகிறார். அந்த வகையில் இவர் தற்போது அரசியலிலும் இறங்கியுள்ளார். சினிமாவில் தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் அரசியலில் இறங்கிவரும் நிலையில், தற்போது இயக்குநர் சுந்தர் சி இறங்கியுள்ளார். மேலும் இவர் தற்போது விஷால் (Vishal) மற்றும் தமன்னா (Tamannaah) நடிக்கும் புருஷன் (Purushan) என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கானது இறுதிக்கட்டத்தில் உள்ளது. மேலும் இவரின் இயக்கத்தில் தெய்வீக படமாக மூக்குத்தி அம்மன் 2 (Mookuthi Amman 2) திரைப்படமானதும் தயாராகியுள்ளது.
இயக்குநர் சுந்தர் சி, கமல்ஹாசன் (Kamal Haasan) தயாரிப்பில் ரஜினிகாந்த் (Rajinikanth) நடிக்கவிருந்த தலைவர் 173 படத்தை (Thalaivar 173) இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின் சில காரணங்களால் அவர் அதிலிருந்து விலகிவிட்டார். அந்த வகையில் அவர் விலக்கியதற்கான காரணம் மற்றும் ரஜினிக்காக அவர் எழுதிய கதை எவ்வாறு இருந்தது என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தனுஷ் படத்திற்கு முன்பு மாரி செல்வராஜ் அந்த ஹிட் படத்தின் பார்ட் 2 இயக்க உள்ளாரா? வைரலாகும் தகவல்
ரஜினிக்காக சுந்தர் சி எழுதிய தலைவர் 173 படத்தின் கதை:
இயக்குநர் சுந்தர் சி நேர்காணலில் பேசுகையில், உண்மையை சொல்லப்போனால், அது எனக்கு அளவுக்கு அதிகமான அழுத்தமாக இருந்தது. எனது இஷ்டத்தில் கிட்டத்தட்ட 16 வருடங்களாக படங்களை இயங்கிவந்த நிலையில், இவ்வளவு பெரிய படம் கிடைத்ததில் எனக்கு அழுத்தம் இருந்தது என கூறினார். மேலும் பேசிய அவர், தலைவர் 173 படத்திலிருந்து விலகுவதாக, ரஜினிகாந்த் சாரிடம் சொல்லிவிட்டுத்தான் அனைவருக்கும் அறிவித்தேன்.
இதையும் படிங்க: அன் ஆர்டினரி மேன் படத்திலிருந்து வைரலாகும் பிடிஎஸ் வீடியோ!
எங்கள் இருவருக்குமே ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. ரஜினிகாந்த் சாரிடம் உத்தரவு வாங்கிவிட்டுத்தான், நான் விலகுவதாக அறிவித்தேன். மேலும் இப்படத்தின் கதை, ரஜினிகாந்த் சார் நடிக்கும், சுந்தர் சி-யின் கதையாக இருந்தது. ரஜினிகாந்த் சாரிடம் சொன்னது எனது ஸ்டைலில் உள்ள கதைதான். நிச்சயம் அந்த கதையை படமாக எடுப்பேன். ரஜினி சார் நடிக்கிறாரோ? இல்லையோ, அந்த கதையை நான் நிச்சயமாக பண்ணுவேன்” என அதில அவர் தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்தின் தலைவர் 173 திரைப்படம் பற்றி இயக்குநர் சுந்தர் சி பேசியது குறித்த பதிவு:
Director #SundarC shares insights about his discussions with Rajinikanth and Kamal Haasan:
* “#Rajinikanth sir wanted to do a family-oriented film similar to the ones we saw in the 90s. That idea still exists… I’ll definitely do it with another hero. I informed him before… pic.twitter.com/RqMwrCn1Hy
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) May 2, 2026
ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கை முடித்த நிலையில், தலைவர் 173 படத்திற்காக தயாராகிவருகிறார். இதை சுந்தர் சி இயக்குவதாக அறிவித்து பின் அவர் அதிலிருந்து விலகிவிட்டார். இதையடுத்து டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அவரும் இதிலிருந்து விலகிவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. தற்போது இப்படத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்குவதாக வட்டாரங்கள் கூறிவருகிறது.