Sreeleela : ஸ்ரீலீலாவின் பிறந்தநாள்.. பராசக்தி பட ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து வாழ்த்துக் கூறிய சுதா கொங்கரா!

HBD Sreeleela : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் சுதா கொங்கரா. இவரை இயக்கத்தில் பராசக்தி படமானது உருவாகிவரும் நிலையில், இன்று 2025, ஜூன் 14ம் தேதியில் நடிகை ஸ்ரீலீலாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Sreeleela : ஸ்ரீலீலாவின் பிறந்தநாள்.. பராசக்தி பட ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து வாழ்த்துக் கூறிய சுதா கொங்கரா!

ஸ்ரீலீலா

Published: 

14 Jun 2025 21:24 PM

 IST

நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) முன்னணி நடிப்பில் மிக பிரம்மாண்டமாகத் தயாராகிவரும் திரைப்படம் பராசக்தி (Parasakthi). இந்த படமானது சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் முன்னணி நாயகியாக நடித்து வருபவர் நடிகை ஸ்ரீலீலா (Sreeleela). புஷ்பா 2 (Pushpa 2) படத்தில் கிஸ்ஸிக் என்ற பாடலில் மூலம் மிகவும் பிரபலமானார். அதற்கு முன் நடிகர் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தும் பிரபலமானார். இவர் தமிழில் இவர் பராசக்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara)  இயக்கி வருகிறார். இவர் இறுதிச்சுற்று மற்றும் சூரரைப்போற்று போன்ற ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். அந்த விதத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படியாகக் கொண்டு உருவாகிவரும் படம் பராசக்தி.

இந்நிலையில் இன்று 2025, ஜூன் 14ம் தேதியில் நடிகை ஸ்ரீலீலா தனது 24வது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இவருக்கு வாழ்த்துக்கள் கூறும் விதத்தில், பராசக்தி பட இயக்குநர் சுதா கொங்கரா, பராசக்தி பட ஷூட்டிங் வீடியோ மற்றும் அந்த படத்தில் ஸ்ரீலீலா நடித்திருக்கும் கதாபாத்திரம் தொடர்பான புகைப்படங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இயக்குநர் சுதா கொங்கரா வெளியிட்ட எக்ஸ் பதிவு :

பராசக்தி திரைப்படம் :

இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகிவரும் படம்தான் பராசக்தி. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி நாயகனாக நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் நடிகர் அதர்வா மற்றும் ரவி மோகன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த சம்பவமானது கடந்த 1960ம் ஆண்டு நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிகை ஸ்ரீலீலாவும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல கோடி பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படத்தை டான் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் ஆகாஷ் பாஸ்கரன் இணைந்து தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் பராசக்தி படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலீலாவின் புதிய படங்கள் :

நடிகை ஸ்ரீலீலாவின் நடிப்பில் பான் இந்திய மொழிகளில் பல படங்கள் உருவாகிவருகிறது. தெலுங்கில் ஜூனியர், மாஸ் ஜாத்ரா, உஸ்தா பகத் சிங், மற்றும் லெனின் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் இந்தியில் கார்த்திக் ஆர்யனுடன் ஆஷிகி 3 படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட .வேலைகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பான் இந்திய மொழி படங்களில் நடிகை ஸ்ரீலீலா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயிலை தவறவிட்டவர்கள் அதே டிக்கெட்டை வைத்து வேறு ரயிலில் பயணிக்க முடியுமா?
ரோகித்துக்கு வட பாவ் வழங்க முயன்ற ரசிகர் - வைரலாகும் வீடியோ
விராட் கோலியை போலவே இருக்கும் சிறுமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
இந்திய கிரிக்கெட்டில் எழுந்த டோப்பிங் சர்ச்சை.. சிக்கிய ராஜன் குமார்..