சிவகார்த்திகேயனின் அந்த குணங்கள் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு – இயக்குநர் சுதா கொங்கரா

Sudha Kongara about Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் பெண் இயக்குநராக தனது படங்கள் மூலம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார் இயக்குநர் சுதா கொங்கரா. இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் அந்த குணங்கள் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு - இயக்குநர் சுதா கொங்கரா

சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கரா

Published: 

08 Oct 2025 16:57 PM

 IST

தமிழ் சினிமாவில் பெண் இயக்குநராக இருந்து இவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருபவர் இயக்குநர் சுதா கொங்கரா. இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இந்தப் இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களில் சூரரைப் போற்று படம் தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா எந்தப் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பு வெளியானதும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்திற்கு பராசக்தி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பகாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகர்கள் ரவி மோகன், அதர்வா என பலரும் இந்தப் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் அந்த குணங்கள் ரொம்ப பிடிக்கும்:

சமீபத்தில் இயக்குநர் சுதா கொங்கரா அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயனின் குணங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சினிமாவில் சிவகார்த்திகேயன் எடுக்கும் ரிஸ்க் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. அந்தப் படம் ஓடுமா ஓடாததா என்பதைப் பற்றி எந்த யோசனையும் இல்லாமல் படத்தின் கதையை பிடித்த உடனே செய்கிறார். அது எனக்கு மிகவும் பிடித்தது.

மேலும் பராசக்தி படத்தின் கதையில் 4 பாய்ண்ட் தான் நான் சொன்னேன். உடனே அவர் அந்தப் படத்தை செய்கிறேன் என்று தெரிவித்தார். அவரது முடிவு எனக்கு மிகவும் ஆச்சரியப்படுத்துவதாக இருந்தது என்றும் சுதா கொங்கரா அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Also Read… ஜீனி படம் குறித்து கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு

இணையத்தில் வைரலாகும் சுதா கொங்கராவின் பேச்சு:

Also Read… போற போக்கில் ஒரு லுக்க வுட்டு என்ன செஞ்சிட்டாளே – 9 வருடங்களைக் கடந்தது ரெமோ படம்