ஷாலினி அஜித்குமாரின் பர்த்டே ஸ்பெஷல்… அமர்க்களம் பட ரீ ரிலீஸ் குறித்து அறிவித்த தயாரிப்பாளர்!

Amarkkalam Re-release: தமிழ் சினிமாவில் பிரபல ஜோடியாக இருந்துவருபவர்கள் அஜித் குமார் மற்றும் ஷாலினி. இவர்கள் இருவரும் சினிமாவில் ஒன்றாக நடித்த பின், காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அந்த வகையில் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்நிலையில் இவரின் பிறந்தநாளை ஸ்பெஷலாக அமர்க்களம் படம் ரீ-ரிலீஸ் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.

ஷாலினி அஜித்குமாரின் பர்த்டே ஸ்பெஷல்... அமர்க்களம் பட ரீ ரிலீஸ் குறித்து அறிவித்த தயாரிப்பாளர்!

அமர்களம்

Published: 

20 Nov 2025 22:20 PM

 IST

கோலிவுட் சினிமாவில் கடந்த 2000ம் ஆண்டு தொடக்க காலங்களில் மிகவும் பிரபலமான ரீல் ஜோடியாக இருந்துவந்தவர்கள் அஜித் குமார் (Ajith kumar) மற்றும் ஷாலினி (Shalini). இவர்கள் படங்ககளில் ஒன்றாக நடித்து , பின் காதலித்து திருமணம் செய்துகொண்டிருந்தனர். இவர்கள் ஜோடி படங்களில் எவ்வளவு பிரபலமானதோ, அதை போல நிஜத்திலும் மக்களிடையே மிகவும் பிரபலமான ஜோடியாக தற்போதுவரை இருந்துவருகின்றன. அவ்வப்போது நடிகை ஷாலினி அஜித் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் குமார் தொடர்பான புகைப்படங்களை வெளிவிடுவது வழக்கம்தான். அந்த அளவிற்க்கு இணையதளங்களில் ஆக்டிவாக இருந்துவருகிறார். தனது சிறுவயதிலிருந்து படங்களில் நடித்துவரும் இவர், திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். அந்த வகையில் இன்று 2025 நவம்பர் 20ம் தேதியில் இவர் தனது 45வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

இவரின் பிறந்தநாளை முன்னிட்டு அமர்க்களம் (Amarkkalam) திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தொடர்பான அறிவிப்பை இயக்குநர் சரண் (Saran) வெளியிட்டுள்ளார். இந்த நிஜ ஜோடி, அமர்க்களம் படத்தின் மூலம் முதல் முதலில் இணைந்த நிலையில், ஷாலினியின் பிறந்தநாளை ஸ்பெஷலாக இப்படத்தின் ரீ-ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: என்னுடைய இசை வாழ்க்கையில் சிறந்த பாடல்களில் ஒன்று… பராசக்தி படத்தின் 2-வது பாடல் குறித்து அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்

அமர்க்களம் திரைப்படத்தின் ரீ ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் சரண் வெளியிட்ட பதிவு :

இந்த அமர்க்களம் திரைப்படம் கடந்த 1999ம் ஆண்டில் ஆகஸ்ட் 15ம் தேதியில் வெளியானது. இந்த 2025ம் ஆண்டுடன் இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளை கடந்துள்ளது. இதன் ஸ்பெஷலாக இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என ஏதிர்பார்க்கப்பட்டுவந்தது. அந்த வகையில் இப்படம் இன்று 2025 நவம்பர் 20ம் தேதியில் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. ஷாலினியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ரீ ரிலீஸ் அறிவிப்பை இயக்குநர் சரண் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்… ஜன நாயகன் படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதியில் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருகிறது.

அமர்க்களம் திரைப்படம் :

இந்த அமர்க்களம் படத்தை இயக்குநர் சரண் இயக்க, அஜித் குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் வையாபுரி, வினு சக்கரவர்தி உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். அற்புதமான காதல் கதைக்களத்தில் வெளியன் இப்படமானது ரசிகர்களால் இன்று வரையிலும் ரசிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்படம் வெளியாகி 25 ஆண்டுகளான நிலையில், ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாரணாசி பட நிகழ்வில் நடந்த சுவாரசியங்கள்.... பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ!
ஊழியர்களை கண்காணிக்க புதிய கருவியை பயன்படுத்தும் Cognizant!
ஐபிஎல் ஏலம்.. எப்போது? எங்கு நடைபெறுகிறது? 
மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு மத்திய அரசின் 5 இலவச AI படிப்புகள்.. என்னென்ன தெரியுமா?