Shankar : வேள்பாரி உலகம்போற்றும் படமாக உருவாகும்.. இயக்குநர் ஷங்கர் பேச்சு!

Shankar Talks About Filming The Novel Velpaari : தமிழ் சினிமாவில் முன்னணி மற்றும் பிரமாண்ட திரைப்படங்களை இயக்கி வெற்றிபெற்ற இயக்குநர் எஸ். ஷங்கர். இவர் சமீபத்தில் வேள்பாரி நாவல் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில், வேள்பாரி கதைக்களத்தை உலகம் போற்றும் திரைப்படமாக எடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

Shankar : வேள்பாரி உலகம்போற்றும் படமாக உருவாகும்.. இயக்குநர் ஷங்கர் பேச்சு!

இயக்குநர் சங்கர்

Published: 

12 Jul 2025 15:42 PM

இயக்குநர் எஸ். ஷங்கர் (S Shankar) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் ரஜினிகாந்த் (Rajinikanth) வரை உச்ச பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்திருக்கிறனர். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் கேம் சேஞ்சர் (Game changer). நடிகர் ராம் சரணின் (Ram Charan) நடிப்பில் இப்படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் அறிமுகமானார். ஆனால் இவருக்கு இந்த திரைப்படமானது எதிர்பார்த்த வரவேற்பைக் கொடுக்கவில்லை என்றே கூறலாம். இந்த படத்தைத் தொடர்ந்து தமிழில் இந்தியன் 3 படத்தையும் இயக்கிவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற எழுத்தாளரும், மதுரை எம்பியுமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி (Velpari) வெற்றி விழாவில் இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டார்.

அதில் பேசிய அவர், வேள்பாரி நாவலைத் திரைப்படமாக எடுக்கவுள்ளதாக்கவும்,  இந்த திரைப்படமானது உலகம் போற்றும் திரைப்படமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். அவர் பேசியது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்

இயக்குநர் ஷங்கர் வேள்பாரி படமாக உருவாக்குவதைப் பற்றி பேச்சு :

இயக்குநர் சங்கர் அந்த நிகழ்ச்சியில் மேடையில் பல்வேறு விஷயங்களைப் பேசினார். அதை தொடர்ந்து வேள்பாரி நாவலைப் படமாக இயக்கவுள்ளதையும் பற்றிப் பேசியிருந்தார். அதில் இயக்குநர் சங்கர் , “முதலில் எனது கனவு திரைப்படமாக இருந்தது எந்திரன், இப்போது எனது கனவு திரைப்படம் வேள்பாரி. எப்போது ஒரு பெரிய திரைப்படம் எடுத்தாலும் சந்திரலேகா திரைப்படத்தை போலப் பெரிய படமாக இருக்கும் எனச் சொல்வார்கள். உண்மையிலே சந்திர லேகா படத்தை விடப் பெரிய படமாக இந்த வேள்பாரி அமையும் என நம்புகிறேன்.

இதையும் படிங்க : அனுபவசாலிகள் இல்லையென்றால் எந்த கட்சியும் தேறாது… ரஜினிகாந்த் அதிரடி !

எஸ்.எஸ். வாசன் ஐயா இருந்திருந்தால் அவரே இந்த வேள்பாரி படத்தைத் தயாரித்திருப்பார் என நினைக்கிறேன். ஏனென்றால் இந்த வேள்பாரி கதையில் அவ்வளவு ஸ்கோப் இருக்கிறது, நடிப்பு, போட்டோகிராபி, இசை, லிரிக்ஸ், டயலாக்ஸ், ஆர்ட் டிரெக்ஷன், காஸ்டியூம்ஸ் என இன்னும் புது புது தொழில்நுட்பங்களை அறிமுக படுத்தும் திரைப்படமாக இருக்கிறது வேள்பாரி.

இயக்குநர் ஷங்கர் பேசிய வீடியோ :

 

இதையும் படிங்க : சர்தார் 2-வை தொடர்ந்து தெலுங்கு நடிகருடன் இணையும் பி.எஸ். மித்ரன்?

இந்த திரைப்படமும் கேம் ஆப் த்ரோன் மற்றும் அவதார் போன்ற படங்களைப் போல் இந்த படமும் உலகம் போற்றும் திரைப்படமாக அமையும். இந்த படமானது அனைவரையும் திரும்பிப்பார்க்கவைக்கும் தமிழ்ப் படைப்பாக இருக்கும். கனவு திரைப்படம் உண்மையிலே வரும்” என இயக்குநர் ஷங்கர் அதில் பேசியிருந்தார்.