Director Ram: அரசன் பட கதைதான் வெற்றிமாறனின் ஃபர்ஸ்ட் ஸ்டோரியா? – இயக்குநர் ராம் சொன்ன விஷயம்!
Director Ram About Arasan Movie: இயக்குநர் ராம் இயக்கத்தில் தொடர்ந்து தமிழில் வித்தியாசமான கதையில் படங்கள் உருவாகிவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறனின் கூட்டணியில் உருவாகிவரும் அரசன் படத்தின் கதை குறித்து சுவாரஸ்ய விஷயம் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ராம், சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறன்
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்கள் லிஸ்டில் ஒருவராக இருந்துவருபவர் ராம் (Ram). இவரின் இயக்கத்தில் தமிழில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. இவரின் இயக்கத்தில் இறுதியாக தமிழில் வெளியான திரைப்படம் பறந்துபோ (Parandhu Poo) . இதில் நடிகர் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்திருந்த நிலையில், கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவந்தது. அந்த வகையில் தற்போது புது திரைப்படத்தை எழுதும் பணியில் ராம் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன் (Vetrimaaran) மற்றும் ராம் இருவருமே நெருங்கிய நபர்கள் என்று கூறலாம். தற்போது இயக்குநர் வெற்றிமாறன், சிலம்பரசன் (Silambarasan) கூட்டணியில் அரசன் (Arasan) என்ற படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்துவருகிறார்.
இதன் இரண்டாவதுக்கட்ட ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் ராம், வெற்றிமாறனின் அரசன் பட கதை பற்றி சுவாரஸ்ய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆஸ்கர் 2026: விருதுகளை வென்றவர்கள் யார் யார்? லிஸ்ட் இதோ
வெற்றிமாறனின் அரசன் திரைப்படத்தின் கதை குறித்து இயக்குநர் ராம் சொன்ன விஷயம்:
அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ராம் பேசுகையில், “சிலம்பரசனை வைத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிவரும் அரசன் பட கதைதான், வெற்றிமாறன் கடந்த 2003ம் ஆண்டில் எழுதிய முதல் கதை” என்று அந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
அரசன் திரைப்படம் குறித்து நடிகர் சிலம்பரசன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Presenting the promo of #Arasan to you all 🙂#ARASANPromo – https://t.co/Jh7WCRRa4n#VetriMaaran @anirudhofficial @theVcreations #VCreations47 @prosathish @RIAZtheboss
— Silambarasan TR (@SilambarasanTR_) October 17, 2025
சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறனின் கூட்டணியில் உருவகிவரும் அரசன் படத்தை, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துவருகிறார். மேலும் இதற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். வெற்றிமாறன், சிலம்பரசன் மற்றும் அனிருத் கூட்டணி முதல் முறையாக அரசன் படத்திற்காக இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கார்த்திக் சுப்புராஜ் – ராணா இணைந்து தயாரிக்கும் புது படத்தின் டைட்டில் வெளியீடு!
இது தனுஷின் நடிப்பில் 2018ம் ஆண்டில் வெளியான வட சென்னை என்ற படத்தின் கதையை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுவருகிறது. இப்படத்தில் தனுஷை தவிர வட சென்னை படத்தில் நடித்த சில நடிகர்கள் இனைந்து நடித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு படக்குழு வெளியிட திட்டமிட்டுவருகிறதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.