Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Paranthu Po: ஆடம்பர பெற்றோரும்.. எளிமை மகனும்.. பறந்து போ விமர்சனம் இதோ!

Parathu Po Movie X Review : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் ராம். இவரின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி மற்றும் அஞ்சலி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம்தான் பறந்து போ. இப்படம் இன்று 2025, ஜூலை 4ம் தேதியில் வெளியாகியிருக்கும் நிலையில், இப்படத்தின் எக்ஸ் விமர்சனங்களைப் பற்றி பார்க்கலாம்.

Paranthu Po: ஆடம்பர பெற்றோரும்.. எளிமை மகனும்.. பறந்து போ விமர்சனம் இதோ!
பறந்து போ திரைப்பட விமர்சனம்Image Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 04 Jul 2025 15:15 PM

நடிகர் மிர்ச்சி சிவாவின்  (Shiva) முன்னணி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்தான் பறந்து போ (Parathu Po) . இந்த படத்தைத் தமிழ் பிரபல இயக்குநர் ராம் (Ram) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் பல வருடங்களுக்குப் பின் வெளியாகியிருக்கும் கருத்துள்ள திரைப்படமாக இந்த பறந்து போ படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் சிவா முன்னணி நாயகனாக நடிக்க அவருடன் நடிகர்கள் கிரேஸ் ஆண்டனி (Grace Antony), அஞ்சலி (Anjali) , ரயான், அஜூ வர்கீஸ் மற்றும் விஜய் யேசுதாஸ் என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்காக இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இந்த படமானது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது. நகரத்தில் இருக்கும் குடும்பமானது தனது ஒரே மகனுக்காக அயராது உழைக்கின்றனர்.

அந்த மகனுக்காகக் கடினமாக உழைத்து, அவரை உயர்ந்த பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்கின்றனர். மேலும் அவனுக்கு வெளியுலகம் தெரியாமல் வளர்க்கின்றனர். ஆனால் அந்த மகன் அதையெல்லாம் விரும்பாமல், வெளியே காடு, மலைகள் எனச் சுற்ற விரும்புகிறான் . மேலும் தனது நண்பர்களுடன் வெளியே சென்று விளையாட விரும்புகிறான். இந்நிலையில் பாசிடிவ் விமர்சங்களை பெற்றுவரும், இப்படம் குறித்து எக்ஸ் விமர்சங்கம் பற்றிப் பார்க்கலாம்.

பறந்து போ படத்தின் கதைக்களம் என்ன :

இந்த படமானது போராடும் தந்தைக்கும், பிடிவாதமான மகனுக்கு இடையேயான கதையை விவரிக்கிறது. இதில் நடிகர் மிர்ச்சி சிவா தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அப்பா மற்றும் மகனுக்கு இடையேயான போராட்டங்கள் மற்றும் பாசம் என இப்படத்தின் கதை இருக்கிறது.

திரையரங்குகளில் நிச்சயம் சென்று பார்க்கவேண்டிய படம் பறந்து போ :

தற்போது திரைப்படங்கள் சில வாரங்களில் ஓடிடியில் வெளியாகிவிடுகின்றனர். அதன் காரணத்தால் மக்கள் பலரும் ஓடிடியில் பார்த்துவிடலாம் என்று இருக்கின்றனர். ஆனால் இந்த பறந்து போ படத்திற்கு அதிகம் பாசிட்டிவ் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், திரையரங்குகளில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய படமாக இருக்கிறது.

பறந்து போ நடிகர்களின் நடிப்பு எப்படி இருக்கிறது :

இப்படத்தில் இயக்குநர் ராம் நகைச்சுவை உணர்வோடு, ஒரு எமோஷனல் கதையை கூறியிருக்கிறார். மேலும் நடிகர் சிவாவின் எமோஷனல் நடிப்பு மற்றும் நடிகை கிரேஸ் ஆண்டனியின் நடிப்பும் நன்றாக இருக்கிறதாம். மேலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் ரயானின் நடிப்பு நன்றாக இருக்கிறதாம்.

பறந்து போ படத்தின் மைய கரு என்ன :

இந்த படத்தின் மைய கருவாக இருப்பது, ஆடம்பரத்தோடு தனது மகனை வளர்க்க நினைக்கும் பெற்றோர்கள் மற்றும் எளிமையாக வெளியே சென்று சந்தோஷமாக வாழ நினைக்கும் மகன் என முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்குத் திரையரங்கில் பாசிடிவ் ரிவியூஸ் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.