உலகின் மிகச்சிறந்த உணவுகள் கிடைக்கும் 100 நகரங்கள்.. பட்டியலில் இடம் பிடித்த நம்ம சென்னை..
World's Top 100 Food Destinations: டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ள உலகின் மிகச்சிறந்த உணவுகள் கிடைக்கும் 100 நகரங்களின் பட்டியலில் சென்னை இடம் பிடித்துள்ளது. மேலும் இந்தியாவின் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், அமிர்தசரஸ், டெல்லி ஆகிய 5 நகரங்களும் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

உலகின் மிகச்சிறந்த உணவுகள் கிடைக்கும் 100 நகரங்கள் என்ற பட்டியலை டேஸ்ட் அட்லஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த சென்னை இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் மொத்தம் 6 நகரங்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இதில் மும்பை ஐந்தாவது இடத்திலும், அமிர்தசரஸ் 43-வது இடத்திலும், டெல்லி 45 ஆவது இடத்திலும், ஹைதராபாத் 50வது இடத்திலும், கொல்கத்தா 71வது இடத்திலும், சென்னை 75 ஆவது இடத்திலும் இடம்பெற்றுள்ளது. டேஸ்ட் அட்லஸ் என்ற நிறுவனம் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து உணவுகளை மதிப்பாய்வு செய்து அது தொடர்பான ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள மிகச்சிறந்த உணவுகள் கிடைக்கும் நூறு நகரங்கள் என்ற பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 6 நகரங்கள் இடம் பிடித்துள்ளது.
உணவுடன் கலந்திருக்கும் கலாச்சாரம்:
நம் இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான உணவுகள் கிடைக்கும். ஒவ்வொரு உணவுக்கு பின்னாலும் ஏதோ ஒரு வரலாறு ஒளிந்திருக்கும். அதில் குறிப்பிட்ட சுவை மட்டுமல்லாமல் ஒரு சில உணவுகள் நம் கலாச்சாரத்தோடு ஒன்றி இருக்கக்கூடியவை.
மும்பை:
We’re halfway through the year. Where to go for summer vacation? Somewhere with the best food, of course: https://t.co/TVbd3jYZG4 @VisitTuscany @BolognaWelcome @Turismoromaweb @ParisJeTaime @DiscoverOsaka @EnjoyJakarta @VisitMadrid_es @VisitNewOrleans @_VisitMunich @visitbaok… pic.twitter.com/bE1JWbQHrx
— TasteAtlas (@TasteAtlas) July 1, 2025
ஐந்தாவது இடத்தில் உள்ள மும்பையில் கட்டாயம் முயற்சிக்க வேண்டிய உணவுகள் பெல்பூரி, வட பாவ், மோடக் மற்றும் ரக்தா பட்டிஸ். மும்பையில் சாப்பிட சிறந்த இடங்களில் தந்தூரி, கீமா மற்றும் டிக்காவிற்கு பிரபலமான லியோபோல்ட் கஃபே அடங்கும். அடுத்ததாக மெது வடை, உப்மா மற்றும் தேங்காய் சட்னிக்கு பிரபலமான ராம் ஆஷ்ரயா உள்ளது.
அமிர்தசரஸ்:
அமிர்தசரஸ் 43 வது இடத்தில் உள்ளது. அமிர்தசாரி குல்ச்சா, பாலக் பன்னீர், பின்னி, சர்சன் டா சாக் மற்றும் தால் மக்கானி ஆகியவை கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய உணவுகளாக பட்டியலிடப்பட்டுள்ளது. அமிர்தசரஸில் உள்ள சிறந்த பாரம்பரிய இடங்கள் கேசர் டா தாபா அதன் பிர்னி, தால் மக்கானி மற்றும் பாலக் பனீர் ஆகும்.
டெல்லி:
டெல்லி 45வது இடத்தில் உள்ளது, இங்கு கட்டாயம் ருசிக்க வேண்டிய உணவுகள் தால் மக்கானி, முர்க் மக்கானி, சோலே பதுரே, பகோரா மற்றும் குலாப் ஜாமுன் பட்டியலிடப்பட்டுள்ளது. டெல்லியில் சாப்பிட சிறந்த இடங்களில், கீர் மற்றும் பிரியாணிக்கு பெயர் பெற்ற டம் புக்த் இடம்பிடித்துள்ளது.
கொல்கத்தா:
கொல்கத்தா 71வது இடத்தில் உள்ளது, இங்கே கட்டாயம் ருசிக்க வேண்டிய உணவுகள் ரசகுல்லா, ஆலு சாப், ரோஷ்மலை, கத்தி ரோல் மற்றும் சந்தேஷ் ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளது. ரசகுல்லாவுக்கு சித்தரஞ்சன் மிஸ்டன்னா பந்தர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அசைவ பிரியர்களுக்கு ஆலன்ஸ் கிச்சன், அதன் மட்டன் சீக் ரோலுக்கு பெயர்பெற்றது என்றும் நிச்சயம் அங்கு ஒரு முறை சாப்பிட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்:
ஹைதராபாத் 50வது இடத்தில் உள்ளது, கட்டாயம் முயற்சிக்க வேண்டிய உணவுகளின் பட்டியலில் ஹைதராபாத் பிரியாணி, பெசரா தோசை, சிக்கன் 65, கராச்சி பிஸ்கட் மற்றும் இட்லி ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளது.
சென்னை
சென்னை 75வது இடத்தில் உள்ளது, தோசை, இட்லி, சிக்கன் 65, ருமாலி ரொட்டி மற்றும் சாம்பார் ஆகியவை கட்டாயம் ருசிக்க வேண்டிய உணவுகளின் பட்டியலில் அடங்கும்.