கார்த்தியின் ஜப்பான் பட தோல்வி.. அதன் முழு பொறுப்பு நான்தான் – இயக்குநர் ராஜு முருகன்!
Director Raju Murugan About Japan Movie Failure: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ராஜு முருகன். இவர் சசிகுமாரின் மை லார்ட் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நேர்காணலில் பேசிய ராஜு முருகன், கார்த்தியின் ஜப்பான் படத்தின் தோல்விக்கான காரணம் பற்றித் தெரிவித்துள்ளார்.

கார்த்தி மற்றும் ராஜு முருகன்
தமிழில் பிரபலமான இயக்குநர்களில் லிஸ்டில் இருப்பவர் இயக்குநர் ராஜு முருகன் (Raju Murugan). இவர் கடந்த 2014ம் ஆண்டு தமிழில் வெளியான “குக்கூ” (Cuckoo) என்ற படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தார். இந்த படமானது இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இதன் பிறகு ஜோக்கர், ஜிப்ஸி, மார்டன் லவ் சென்னை மற்றும் ஜப்பான் (Japan) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். அந்த விதத்தில் இவரின் இயக்கத்திலும், நடிகர் சசிகுமாரின் (Sasikumar) நடிப்பிலும் உருவாகியுள்ள படம்தான் மை லார்ட் (My Lord). இதில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, நடிகை சைத்ரா ஜே ஆச்சார் (Chaithra J Achar) கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2026 பிப்ரவரி 13ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளானது சிறப்பாக தொடங்கியுள்ளது. அந்த விதத்தில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் ராஜு முருகன், நடிகர் கார்த்தியின் (Karthi) நடிப்பிலும், தனது இயக்கத்திலும் வெளியான ஜப்பான் படத்தில் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து தெளிவாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: நாளை திரையரங்குகளில் வெளியாகும் வித் லவ் படம்… பிரிவியூ ஷோ பார்த்தவர்களின் விமர்சனம் இதோ
ஜப்பான் படத்தின் தோல்வி குறித்து மனம் திறந்த இயக்குனர் ராஜு முருகன் :
அந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் ராஜு முருகன் அதில், “ஜப்பான் படத்தின்போது எனக்கு கார்த்தி சார் மற்றும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மிகவும் ஆதரவு இருந்தது. மேலும் ஒரு கதாநாயகனாக படம் நன்றாக வரவேற்ண்டும் என அவர் என்னுடன் இருந்தார். மேலும் அவர்தான் இப்படத்தின் கதையை படித்துவிட்டு பண்ணவேண்டும் என என்னிடம் சொன்னார். படத்தின் கதையில் இருந்த காட்சிகள் எல்லாம் அப்படியே இருக்கட்டும் மாற்றவேண்டும் என அவரே சொன்னாரு. ஆனால் நான் ஜப்பான் படம் கார்த்தி சாருடன் பண்ணும்போது எனக்கு எப்போதும் பயம் இருந்துகிட்டே இருந்தது. ஏனென்றால், ஒரு பெரிய நடிகரை வைத்து படம் பண்ணுறோமே நன்றாக வந்துவிடுமா என எனக்கு பயம் இருந்தது.
இதையும் படிங்க: அஜித் குமாரை நேரில் சந்தித்த தருணம் – நெகிழ்ச்சியாக பேசிய சிலம்பரசன்!
மேலும் ஜப்பான் படத்தின் கதை முதலில் ஒரு வெப் சீரிஸிற்காக எழுதப்பட்ட கதை. 8 எபிசோட் வெப் சீரிஸிற்காக எழுதப்பட்ட கதை. அதை படித்துவிட்டுத்தான் கார்த்தி சார் படமாக பண்ணலாமே என சொன்னாரு. அதன் பிறகுத்தன் அந்த கதையை, ஒரு படத்திற்கான கதையை மாற்றினோம். ஒரு படத்திற்கான கதைக்கு என்ன பண்ணனும் அதை பண்ணவேண்டும். ஜப்பான் படம் முழுமையாக ராஜு முருகனுடைய படம், ராஜு முருகனுடைய தவறு. தோல்விக்கான பழியை யார் மேலும் நான் போடவிரும்பவில்லை. நான் பண்ண தவறு, அந்த படத்தை கொஞ்சம் வேறுமாதிரி எடுத்திருக்கவேண்டும். ஆனால் என்னால் அவ்வாறு எடுக்கமுடியவில்லை. ஜப்பான் படத்தின் தோல்விக்கு முழுப்பொறுப்பு நான்தான்”என ஆவர் தெரிவித்திருந்தார்.
ஜப்பான் படத்தின் தோல்வி குறித்து இயக்குநர் ராஜு முருகன் பேசிய வீடியோ பதிவு:
Dir #RajuMurugan about #Japan Failure:
“#Karthi sir was supportive & agreed to do experimentation. But i have modified the script for Karthi sir. #Japan movie was initially written as webseries with 8 episodes as hyperlink film. The fault was only with me” pic.twitter.com/duVYCgRK0y— AmuthaBharathi (@CinemaWithAB) February 5, 2026
தற்போது ஜப்பான் பட தோல்வி குறித்து இயக்குநர் ராஜு முருகன் தெரிவித்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பரவிவருகிறது. மேலும் ஒரு இயக்குநர் தான் செய்த தவறை மற்றவர்கள் மீது பழிபோடாமல் தானே ஏற்றுக்கொள்கிறார் என பாராட்டியும் வருகின்றனர்.