கொம்புசீவி பட நடிகை யார் தெரியுமா? நாட்டாமை பட நடிகையின் மகளாம்- வெளிப்படையாக சொன்ன இயக்குநர் பொன்ராம்!
Director Ponram About Actress Tharnika: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர்தான் சண்முக பாண்டியன். இவர் நடிகர் விஜயகாந்த் மகன் ஆவார். சரத்குமார் மற்றும் இவர் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம்தான் கொம்புசீவி. இந்த படத்தில் அறிமுக நடிகை தார்னிகா நடித்துள்ளார். இந்த நடிகை யார் என தெரியுமா? விவரமாக பார்க்கலாம்.

நடிகை தார்னிகா
நடிகர் சண்முக பாண்டியன் (Shanmuga Pandiyan) தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹீரோவாக படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக படைத்தலைவன் (Padaithalaivan) என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது என்று கூறலாம். அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டில் 2வது வெளியாகி தயாராகியுள்ள படம்தான் கொம்புசீவி (Kombuseevi). இப்படத்தை இயக்குநர் பொன்ராம் (Ponram) இயக்க, சரத்குமார் (Sarathkumar) மற்றும் சண்முக பாண்டியன் இணைந்து நடித்துள்ளனர். இவர்களின் கூட்டணி இப்படத்தின் மூலமாக முதல் முறையாக இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது உசிலம்பட்டியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக அறிமுக நடிகை தார்னிகா (Tharnika) நடித்துள்ளார். இவர் இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று 2025 டிசம்பர் 14ம் தேதியில் நடைபெற்றிருந்தது. இதில் பேசிய இயக்குநர் பொன்ராம், நடிகை தரணிகா உண்மையிலே யார் என்பது குறித்து விவரமாக பேசியுள்ளார். நடிகை தரணிகா வேறு யாருமில்லை, நாட்டாமை படத்தின் டீச்சராக நடித்த நடிகை ராணியின் மகள்தான் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அருண் விஜயின் ரெட்ட தல படத்தினை யார் எல்லாம் பார்க்கலாம்? சென்சார் அப்டேட் இதோ
நடிகை தார்னிகா குறித்து பேசிய இயக்குநர் பொன்ராம்:
கொம்புசீவின் பாடத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பொன்ராம், “இந்த படத்தின் முக்கிய நடிகை தார்னிகா, அவர் இன்று இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. அவருக்கும் சரத்குமார் சாருக்கும் ஒரு கனெக்ஷன் இருக்கிறது. மேலும் நாட்டாமை படத்தில் டீச்சர் வேடத்தில் நடிகை ராணி நடித்திருந்தார். அவர் “ஓ போடே” என்ற பாடலின் மூலம் ஹிட்டானவர். அவரின் மகள்தான் தார்னிகா.
இதையும் படிங்க: யாரும் யாருக்கும் போட்டி இல்லை.. விஜய் – சிவகார்த்திகேயன் குறித்து சூரி கருத்து!
இந்த கொம்புசீவி படத்தின் ஹீரோயின் அவங்க. அவர் தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை. விமானத்தில் வீசா கிடைக்கலன்னு சொன்னாங்க, அவரால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் அவர் இந்த படத்தில் அருமையாக நடித்து கொடுத்திருக்கிறார். அவருக்கு இது முதல் படம் என்றாலும் சிறப்பாக நடித்து கொடுத்திருந்தார்” என அவர் அதில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
நடிகை தரணிகா குறித்த இயக்குநர் பொன்ராம் பேசிய வீடியோ பதிவு:
There is one connection between #Kombuseevi heroine #Tharnika and #Sarathkumar 😃
She is the daughter of #Raani, who played the teacher’s role in #Nattamai and is famous for her song “ O Podu ” From #Gemini 💥
— Director Ponram pic.twitter.com/32Rq4tlCK3
— Kolly Corner (@kollycorner) December 15, 2025
இந்த கொம்புசீவி படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகிவந்தது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் சிறப்பாகவே அமைந்துள்ளது. மேலும் படமானது வரும் 2025 டிசம்பர் 25ம் தேதியில் வெளியாகும் நிலையில், எதிர்பார்ப்பை அதிகப்படுத்திவருகிறது.