Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Mysskin : டிரெயின் என்பது ஒரு புழு.. விஜய் சேதுபதியின் ‘ட்ரெயின்’ பட கிளைமேக்ஸை மேடையில் உடைத்த மிஷ்கின்!

Director Mysskin About Train Movie Climax : கோலிவுட் சினிமாவில் மாறுபட்ட கதையைப் படமாகக்கொண்டுவரும் இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் மிஷ்கின். இவரின் படங்களைப் பார்த்தாலே பல அர்த்தங்கள் அதனுள் இருக்கும். அந்த விதத்தில் இவரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ட்ரெயின். இந்த படத்தின் க்ளைமேக்ஸை மேடையில் மிஷ்கின் கூறியுள்ளார்.

Mysskin : டிரெயின் என்பது ஒரு புழு.. விஜய் சேதுபதியின் ‘ட்ரெயின்’ பட கிளைமேக்ஸை மேடையில் உடைத்த மிஷ்கின்!
மிஷ்கினின் ட்ரெயின் படம் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 12 May 2025 17:08 PM

விடுதலை பார்ட் 2  (Viduthalai Part 2) திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi ) முன்னணி நடிப்பில் பல படங்கள், தமிழில் மட்டுமே உருவாகியுள்ளது. தலைவன் தலைவி  (Thalaivan Thalaivii) முதல் ட்ரெயின் (Train) வரை பல படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் மேலும் விரைவில் ஏஸ் (Ace) என்ற படமானது வெளியாகவுள்ளது. இந்த படத்தைய் இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். இந்த படமானது வரும் 2025,மே 23ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து தமிழில் மட்டும் இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படங்கள் ட்ரெயின், காந்தி டால்க்ஸ் மற்றும் தலைவன் தலைவி போன்ற படங்கள். இதில் கோலிவுட் பிரபல இயக்குநர் மிஷ்கின்  (Mysskin) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ட்ரெயின். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முன்னணி நாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தை வி. க்ரியேஷன் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர்கள் நாசர், ஸ்ருதி ஹாசன், நரேன், கலையரசன் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த படத்தின் ஷூட்டிங்கானது கடந்த 2023ம் ஆண்டிலே தொடங்கியது. அதைத் தொடர்ந்து கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது. மேலும் இந்த படமானது போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணியில் தீவிரமாக இருந்து வரும் நிலையில், விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மிஷ்கின் ட்ரெயின் படத்தில் க்ளைமேக்ஸை மேடையில் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த விஷயமானது இணையத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அந்த மேடையில் இந்த ட்ரெயின் படமானது முழுக்க ட்ரெய்னுக்குள் நடக்கும் சம்பங்கள் ஒரு மனிதனை வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது என்பதுதான் க்ளைமேக்ஸ் என்று கூறியிருக்கிறார். இதைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

ட்ரெயின் மூவி க்ளைமேக்ஸை மேடையில் உடைத்த  இயக்குநர் மிஷ்கின்:

அந்த நிகழ்ச்சி மேடையில் இயக்குநர் மிஷ்கின், ட்ரெயின் என்பது ஒரு பிரம்மாண்ட புழுவைப் போல, அதனுள் இருக்கும் மனிதர்கள் அவற்றின் குழந்தைகள். அது அவர்களை ஒரு இடத்திலிருந்து ஏற்றி மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்கிறது. அதைப்போல எனது கதையில் ட்ரெயினில் பல மனிதர்கள் இருக்கிறார்கள், அதில் சிலர் இறந்துவிடுகிறார், சிலர் பத்திரமாக மற்றொரு இடத்தில் சேர்கிறார்கள். அதில் ஒரு கதாநாயகன் வாழ்க்கையை வெறுத்து, தனது மனைவி தன்னிடம் இருந்து பிரிந்த பிறகு எவ்வாறு தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என்று எண்ணி அந்த டிரெயினில் பயணிக்கிறான்

அந்த பயணத்தில் டிரெயினில் நிறைய விஷயங்கள் நடக்கிறது, அதில் நாயகனும் ஈடுபட்டு தன்னை மறந்து விடுகிறான். அந்த டிரெயினில் இருந்து இறங்கும்போது அதன் அனுபவமும், பயணமும் அவனுக்கு ஒரு வாழ்க்கையை கற்றுத்தருகிறது. அந்த டிரெயின் படத்தின் க்ளைமேக்ஸும் , டிரெயினில் இந்த மனிதர்களைப் பார்க்கவில்லை என்றால், அவர்களைச் சந்திக்காமல் இருந்திருக்கிறேன் என்றாலே எனது வாழ்க்கை மோசமாக இருந்திருக்கும். இந்தப்பயணம்தான் எனக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்திருக்கிறது என்பதுதான் படத்தின் கிளைமேக்ஸ் என்று இயக்குநர் மிஷ்கின் ஓபனாக கூறியுள்ளார்.

'செஸ் மதத்துக்கு எதிரானது' - ஆப்கானிஸ்தானில் விளையாடத் தடை
'செஸ் மதத்துக்கு எதிரானது' - ஆப்கானிஸ்தானில் விளையாடத் தடை...
மே 16 முதல் ஐபிஎல் மீண்டும் தொடங்குமா? 3 அட்டவணைகள் ரெடி..!
மே 16 முதல் ஐபிஎல் மீண்டும் தொடங்குமா? 3 அட்டவணைகள் ரெடி..!...
LIVE : பிரதமர் மோடி உரை நேரலை.. ஆபரேசன் சிந்தூர் பற்றி விளக்கம்!
LIVE : பிரதமர் மோடி உரை நேரலை.. ஆபரேசன் சிந்தூர் பற்றி விளக்கம்!...
இபிஎஃப்ஓ இருப்பை சுலபமாக தெரிந்துக்கொள்ள சில வழிகள்!
இபிஎஃப்ஓ இருப்பை சுலபமாக தெரிந்துக்கொள்ள சில வழிகள்!...
கோலியின் நிறைவேறாத கனவு இதுதான்! டெஸ்டில் இந்த சாதனைகள் மிஸ்..!
கோலியின் நிறைவேறாத கனவு இதுதான்! டெஸ்டில் இந்த சாதனைகள் மிஸ்..!...
ஒரு தேங்காய் பன் வாங்கக் கஷ்டப்பட்டேன்- எமோஷனலாக பேசிய சூரி!
ஒரு தேங்காய் பன் வாங்கக் கஷ்டப்பட்டேன்- எமோஷனலாக பேசிய சூரி!...
டூரிஸ்ட் ஃபேமிலி போல தமிழில் வெளியான ஃபீல் குட் படங்களின் லிஸ்ட்
டூரிஸ்ட் ஃபேமிலி போல தமிழில் வெளியான ஃபீல் குட் படங்களின் லிஸ்ட்...
இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விற்பனையில் விவோ முதலிடம்!
இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விற்பனையில் விவோ முதலிடம்!...
கொல்லி மலைக்கு ரூ.450க்கு ஒருநாள் சுற்றுலா பேக்கேஜ் அறிமுகம்...
கொல்லி மலைக்கு ரூ.450க்கு ஒருநாள் சுற்றுலா பேக்கேஜ் அறிமுகம்......
ராஜமௌலி மாதிரி ஒரு நடிகர 3 வருஷம் நான் உக்கார வைக்க மாட்டேன்
ராஜமௌலி மாதிரி ஒரு நடிகர 3 வருஷம் நான் உக்கார வைக்க மாட்டேன்...
லோகேஷ் கனகராஜ் - ராகவா லாரன்ஸின் 'பென்ஸ்' பூஜை!
லோகேஷ் கனகராஜ் - ராகவா லாரன்ஸின் 'பென்ஸ்' பூஜை!...