Mysskin: விஜய் சேதுபதிக்கு நான் நாலு கதை சொல்லியிருக்கேன்.. – மிஷ்கின் சொன்ன விஷயம்!

Mysskin About Vijay Sethupathi: தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநராகவும், நடிகராகவும் இருந்துவருபவர் மிஷ்கின். இவர் முன்பு ஒரு நேர்காணலில் பேசியிருந்தபோது, நடிகர் விஜய் சேதுபதி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். விஜய் சேதுபதிக்கு தனது கதை பிடித்திருந்தது குறித்து ஓபனாக பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Mysskin: விஜய் சேதுபதிக்கு நான் நாலு கதை சொல்லியிருக்கேன்.. - மிஷ்கின் சொன்ன விஷயம்!

மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி

Published: 

05 Jan 2026 08:30 AM

 IST

கோலிவுட் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கி மக்களிடையே மிகவும் பிரபலமான இயக்குநராக இருப்பவர் மிஷ்கின் (Mysskin). மற்ற இயக்குநர்களில் இருந்து மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். இவரின் இயக்கத்தில் வெளியான படங்களை முதலில் பார்க்கும்போது பெரிதாக புரியாதது போல இருக்கும். ஆனால் அவரின் படங்களில் அவ்வளவு அர்த்தங்கள் மற்றும் மர்மங்கள் பல ஒளிந்திருக்கும். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2 படங்கள் உருவாகியுள்ள நிலையில், இன்னும் வெளியாகாமல் இருகிறது. அதில் நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan) இணைந்து நடித்துள்ள படம்தான் ட்ரெயின் (Train). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலே தயாரான நிலையில், தற்போதுவரை இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவருகிறது.

இந்த 2026ம் ஆண்டில் இப்படமானது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை அடுத்ததாக ஆண்ட்ரியாவின் (Andrea) நடிப்பில் உருவாகியுள்ள படம் பிசாசு 2 (Pisaasu 2). இதிலும் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் மிஷ்கின், நடிகர் விஜய் சேதுபதி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ஜன நாயகன் படம் முழுமையாகவே பகவந்த் கேசரி பட ரீமேக்கா? ட்ரெய்லரில் ஒத்துப்போன காட்சிகள்..

விஜய் சேதுபதியின் ட்ரெயின் பட பாடல் குறித்த பதிவு :

விஜய் சேதுபதி குறித்து புகழ்ந்து பேசிய இயக்குநர் மிஷ்கின் :

முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய மிஷ்கின், அதில், “நான் விஜய் சேதுபதிக்கு கிட்டத்தட்ட 4 கதையை சொல்லிருக்கேன். அந்த நான்கு கதையும் அவருக்கு பிடிக்கிறது என அவர் கூறினார். நான் அந்த நான்கு கதையில் எதாவது ஒன்றை தேர்ந்தெடுத்தால் அதைவைத்து படம் பண்ணலாம் என நினைத்தேன். ஆனால் அவருக்கு அந்த 4 கதையும் மிகவும் பிடித்திருந்தது. இவருக்கு பிடித்தது மட்டுமில்லாமல் விஜய் சேதுபதி அவரின் வீட்டிலும் இந்த கதைகளை பற்றி கூறியுள்ளார். அது அவரின் மகள் மற்றும் மனைவிக்கும் ரொம்பவே பிடித்துவிட்டதாம். அது குறித்து என்னிடம் போனில் பேசினார் விஜய் சேதுபதி.

இதையும் படிங்க: நான் அந்த நடிகரை பார்த்துதான் அதையெல்லாம் கத்துக்கிட்டேன்- சியான் விக்ரம் ஓபன் டாக்!

மேலும் அவர் 4 கதையும் பிடித்திருக்கிறது என்ற கூறிய நிலையில் எனக்கு பயம் வந்துவிட்டது. மேலும் மிகவும் வித்தியாசமான பையன் விஜய் சேதுபதி. ஒரு நாள் திடீரென வீட்டிற்கு வந்தார். என்ன டா என கேட்டபோது, இப்பதான் விமான நிலையத்தில் இருந்து வருகிறேன், அப்படியே உங்களை பார்த்துவிட்டு செல்லலாமா என நினைத்தேன் என் கூறினார். மேலும் இருவரும் ஒரு தம் போட்டுவிட்டு அப்படியே வீட்டிற்க்கு கிளம்பிவிட்டோம்” என இயக்குநர் மிஷ்கின் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் வாரணாசி திரைப்படம் படைக்கும் புதிய சாதனை
10 ஆண்டுகளாக கோதுமைக்கு பதிலாக ரகுல் ப்ரீத் சிங் பயன்படுத்தும் மாவு இது தான் - அப்படி என்ன ஸ்பெஷல்?
செல்லப்பிராணியாக வளர்த்த பாம்பு கடித்து விரலை இழந்த இளைஞர் - சீன இளைஞருக்கு நடந்த சோகம்
7 மோதங்கள் தொடர்ந்து நடக்கும் போர், முக்கிய நபர் இறப்பார்... 2026 குறித்து நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகளால் சர்ச்சை