அனிருத்தின் வளர்ச்சியைப் பார்த்தா பிரமிப்பா இருக்கு – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

Director AR Murugadoss: இயக்குநர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். இவரது இயக்கத்தில் வெளியான பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள மதராஸி படம் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றது.

அனிருத்தின் வளர்ச்சியைப் பார்த்தா பிரமிப்பா இருக்கு - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

அனிருத், ஏ.ஆர்.முருகதாஸ்

Updated On: 

04 Sep 2025 07:11 AM

 IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் நடிகர் அஜித் குமார் நடித்த தீனா படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது அனைவரும் அறிந்ததே. இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்கள் பலரை இவர் இயக்கி உள்ளார். தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி இந்தியில் அமீர் கான், சல்மான் கான் என முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார். பான் இந்திய அளவில் பெரிய இயக்குநராக வலம் வரும் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மதராஸி. நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில் நடிகை ருக்மினி வசந்த் நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் தயாரித்துள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். மேலும் படம் இன்னும் இரண்டு நாட்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் பாடல்கள் தற்போது தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இசையமைப்பாளர் அனிருத் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.

அனிருத் ரசிகர்களின் பல்சை சரியாக தெரிந்து வைத்துள்ளார்:

அந்த பேட்டியில் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியதாவது அனிருத்தின் வளர்ச்சி எனக்கு மிகவும் பிரமிப்பா இருக்கு. ரசிகர்களின் பல்சை புரிந்து சரியாக பிடித்துவைத்துள்ளார். மதராஸி படத்தில் ஒரு விசயத்தை சொல்லவேண்டும். ஒரு பாடலுக்கு மாண்டேஜ் எடுத்துட்டோம். அத ஏற்கனவே அனிருத் ரெடி பண்ணி வச்சுருந்த பாட்டோட எடிட் பண்ணி பார்த்தோம் அது செட்டாகல.

உடனே அனிருத் இது வேண்டாம் வேற பாட்டு போடலாம் சொன்னார். நான் சார் டைம் இல்ல ரிலீஸ் டேட் நெருங்கிடுச்சு இருக்கட்டும் விடுங்க சொன்னேன். அவர் கேக்கல உடனே ஒரே நாள்ள ரெடி பண்ண பாட்டுதான் இப்போ ரிலீஸாகியிருக்க தங்கப்பூவே பாடல் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… மதராஸி – காந்தி கண்ணாடி… இந்த வாரம் எந்தப் படத்தை தியேட்டரில் பார்க்க போறீங்க?

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ஏ.ஆர்.முருகதாஸின் வீடியோ:

Also Read… எஸ்.ஏ.சந்திரசேகர் – ஷோபா கட்டிய புதிய வீட்டின் கிரகப்பிரவேசம்.. தளபதி விஜய் வரவில்லையா?