LK7 படத்தின் ப்ரீ புரடெக்‌ஷன் பணிகளில் களமிறங்கிய லோகேஷ் கனகராஜ்!

Director Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது நாயகனாக நடித்து வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக இவர் இயக்க உள்ள 7-வது படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

LK7 படத்தின் ப்ரீ புரடெக்‌ஷன் பணிகளில் களமிறங்கிய லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜ் மற்றும் டீம்

Published: 

26 Nov 2025 15:10 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி ஆகியப் படங்களை இதுவரை இயக்கி உள்ளார். தமிழ் சினிமாவில் குறிப்பாக இந்திய சினிமாவில் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற முறையை கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் கமல் ஹாசன், விஜய் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை வைத்து படங்களை இயக்கி உள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் இதுவரை வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இறுதியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான நிலையில் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் டிசி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

LK7 படத்தின் ப்ரீ புரடெக்‌ஷன் பணிகளில் களமிறங்கிய லோகேஷ் கனகராஜ்:

இந்தப் படத்தில் நடித்து முடித்தப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தனது இயக்கத்தில் உருவாக உள்ள 7-வது படத்தின் பணிகளில் ஈடுபட உள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தின் ப்ரீ புரடெக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருவதாக லோகேஷ் கனகராஜின் இயக்குநர் குழுவில் உள்ளவர் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… உனக்கென மட்டும் வாழும் இதயமடி… 14 ஆண்டுகளை நிறைவு செய்தது மயக்கம் என்ன படம்

இணையத்தில் கவனம் ஈர்க்கும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஸ்கூல் யூனிஃபார்மில் இருக்கும் இந்த சிறுமி இப்போ ஸ்டார் நடிகை… யார் தெரியுமா?

அனு தாக்குதல்களை தாங்கக் கூடிய செயற்கை மிதக்கும் தீவை உருவாக்கும் சீனா
தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
ராமர் கோயிலில் ஏற்றப்பட்ட கொடி.. அதன் சிறப்பம்சங்கள் என்ன?
ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் மேகி சமைத்த பெண்!