அல்லு அர்ஜுனுக்கு கதை சொன்ன நெல்சன் – உண்மையை உடைத்த பிரபல இயக்குநர்!
Nelsons Story Rejected By Allu Arjun: தென்னிந்திய சினிமாவில் சிறந்த இயக்குநர்களின் லிஸ்டில் ஒருவராக இருப்பவர் நெல்சன் திலீப்குமார். இவர் தளபதி விஜய் முதல் ரஜினிகாந்த் போன்ற நடிகர்களை வைத்து படங்ககளை இயக்கியிருக்கிறார். இவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கதை சொல்லியிருந்ததாக தெலுங்கு இயக்குநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜுன் மற்றும் நெல்சன் திலீப்குமார்
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) தமிழில் நயன்தாராவின் (Nayanthara) கோலமாவு கோகிலா (Co Co) என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். இந்த படமானது இவருக்கு பெரும் வரவேற்பை கொடுக்க, தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்க தொடங்கினார். அதிலும் இவருக்கு 2வது வெற்றியை கொடுத்த படம் டாக்டர் (Doctor). நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியிருந்த இப்படமானது சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. சிவகார்த்திகேயனுக்கும் இதுவே ரூ 100 கோடி வசூல் செய்த முதல் படமாகவே அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) போன்ற பிரபலங்களை வைத்தும் படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 (Jailer 2) படத்தையும் இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர் தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு (Allu Arjun) கதை ஒன்றை கூறியதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவந்த நிலையில், தற்போது அதை தெலுங்கு இயக்குநரான கோதண்டராமி ரெட்டி (Kodandarami Reddy) உறுதி செய்துள்ளார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தனுஷின் ‘டி55’ படத்தில் கதாநாயகியாக களமிறங்கும் ஸ்ரீலீலா!
அல்லு அர்ஜுனுக்கு நெல்சன் கதை சொன்னது குறித்து இயக்குநர் கோதண்டராமி ரெட்டி பேச்சு :
சமீபத்தில் நேர்காணலில் பேசிய இயக்குனர் கோதண்டராமி ரெட்டி, “ஜெயிலர் பட இயக்குநர் நெல்சன், அல்லு அர்ஜுனுக்கு கதை சொல்லியிருந்தார். அந்த கதை குறித்து அல்லு அர்ஜுன் என்ன நினைத்தார் என தெரியவில்லை என்று அந்த நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார்.
இயக்குநர் கோதண்டராமி ரெட்டி பேசிய வைரல் வீடியோ பதிவு:
Confirmed News 🚨
Director #Nelson Narrated a story to #AlluArjun, revealed by veteran director #KodandaramiReddypic.twitter.com/C3SPPKXx6I
— Milagro Movies (@MilagroMovies) January 30, 2026
நெல்சன் திலீப்குமாரின் புது படம் :
ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் தெலுங்கு சினிமாவில் படத்தை இயக்கவுள்ளார். ஏற்கனவே இவரின் தோழர்களும் இயக்குநர்களுமான அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜ் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து படத்தை இயக்கவுள்ள நிலையில், இவரும் இயக்கபோவதாக தகவல்கள் வெளியாகிவந்தது. தற்போது இவரின் கதையில் அல்லு அர்ஜுன் நடிக்க மறுத்ததாக கூறப்படும் நிலையில், அந்த கதையை ஜூனியர் என்.டி.ஆருக்கு நெல்சன் திலீப்குமார் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஷாருக்கானிடமிருந்து அதை எப்போதும் கவனித்திருக்கிறேன் – தளபதி விஜய்!
அந்த கதையானது ஜூனியர் என்.டி.ஆருக்கு பிடித்திருந்த நிலையில், NTRNEEL படத்திற்கு பின் நெல்சன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணையும் படம் உருவாகும் என கூறப்படுகிறது. இப்படத்தை சூர்யா46 படத்தை தயாரிக்கும் சித்தாரா என்டேர்டைமென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.