தியேட்டரில் இருந்து சூர்யாவிற்கு வீடியோ கால் செய்த கார்த்திக் சுப்பராஜ் – வைரலாகும் வீடியோ

Director Karthik Subbaraj: ரெட்ரோ படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு நடிகர் சூர்யா வர முடியாத காரணத்தால் தியேட்டரில் அவர் ரசிகர்களின் உற்சாகத்தை காண வேண்டும் என்பதற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தியேட்டரில் இருந்தவாரே நடிகர் சூர்யாவிற் வீடியோ கால் செய்து காட்டியுள்ளார். இது தொடர்பானா வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தியேட்டரில் இருந்து சூர்யாவிற்கு வீடியோ கால் செய்த கார்த்திக் சுப்பராஜ் - வைரலாகும் வீடியோ

வீடியோ காலில் ரசிகர்களைப் பார்த்த சூர்யா

Published: 

01 May 2025 14:48 PM

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Director Karthik Subbaraj) இயக்கத்தில் நடிகர் சூர்யா (Actor Suriya) நடிப்பில் இன்று மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் ரெட்ரோ. இந்தப் படம் சூர்யாவின் 44-வது படம் ஆகும். சூர்யாவின் முந்தைய படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெறாத காரணத்தால் இந்தப் படம் அவருக்கு சூப்பர் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே சூர்யாவின் தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்த நிலையில் படத்தின் முதல் நாள் காட்சி இன்று காலை 9 மணி முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியது. இதில் ரசிகர்களுடன் இணைந்து படத்தைப் பார்க்க இயக்குநர் உட்பட படக்குழுவினர் பலர் திரையரங்குகளுக்கு சென்றனர்.

இந்தப் படத்தில் சூர்யாவிற்கு நாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், கருணாகரன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

காலை முதலே முதல் நாள் முதல் காட்சியைக் காண ரசிகர்கள் அருகிலுள்ள திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் முதல் நாள் முதல் காட்சியைக் காண தியேட்டருக்கு வந்தார். நடிகர் சூர்யா நேரில் அங்கு வர முடியாவிட்டாலும், தனது படத்திற்கான ரியாக்‌ஷன் என்ன என்பதை தெரிந்துகொண்டார்.

சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியான ஒரு வீடியோவில், நடிகர் சூர்யா வீடியோ அழைப்பில் இணையும்போது, ​​இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது தொலைபேசியை ரசிகர்களுக்கு நேராக காட்டினார். நடிகர் சூர்யா ரசிகர்களின் கொண்டாட்டதை வீடியோ காலில் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.

இணையத்தில் வைரலாகும் நடிகர் சூர்யாவின் வீடியோ:

இந்தப் படம் முதல் காட்சி முடிவடைந்த நிலையில் ரசிகர்கள் இது தொடர்பான கருத்துகளை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதில் பெரும்பாளான ரசிகர்கள் இந்தப் படம் நிச்சயமாக நடிகர் சூர்யாவின் கம்பேக் என்று தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம். அந்த எக்ஸ்பீரியன்ஸ் வேற லெவல் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories
காமெடி படத்தில் இத்தனை ட்விஸ்டா? அமேசான் ப்ரைம் வீடியோவில் இருக்கும் இந்த மதுர மனோகர மோஹம் படத்தை கண்டிப்பா பாருங்க!
ஜோதிகா மற்றும் கார்த்தி இல்லாமல் சூர்யா இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும் அந்த ஒரே ஒரு தமிழ் நடிகர்… யார் தெரியுமா?
பிளாக் மெயில் முதல் சரண்டர் வரை… இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
இனி ஃபேமிலி செண்டிமெண்ட்லாம் ஹிட்டடிக்கதுனு நீ சினிமாவை விட்டு போ சொன்னாங்க – இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!
பண மோசடி வழக்கில் பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டேன்…. ‘கிங்டம்’ பட நிகழ்வில் விஜய் தேவரகொண்டா உருக்கம்!