இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்கும் நடிகர் அதர்வா முரளி? இணையத்தில் வைரலாகும் தகவல்

Director Hari Next Movie Update: தமிழ் சினிமாவில் ஃபேமிலி செண்டிமெண்ட் ஆக்‌ஷன் பாணியில் பலப் படங்களை இயக்கி உள்ளவர் இயக்குநர் ஹரி. இவர் அடுத்ததாக நடிகர் அதர்வா முரளியை இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்கும் நடிகர் அதர்வா முரளி? இணையத்தில் வைரலாகும் தகவல்

அதர்வா - ஹரி

Published: 

16 Apr 2026 13:22 PM

 IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் அதர்வா முரளி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் தமிழ் சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இவர் நாயகனாக அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் பெரிய அளவில் படங்கள் வெற்றியடையவில்லை என்றாலும் சமீப காலமாக நடிகர் அதர்வா முரளி நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறிப்பாக கடந்த 2025-ம ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகி இரண்டுமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே நடிகர் அதர்வா முரளி நடிப்பில் பராசக்தி படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து இருந்த நிலையில் அவரது தம்பியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் அதர்வா. இந்தப் படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் வெளியாக வரிசையாக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்கும் நடிகர் அதர்வா முரளி?

இந்த நிலையில் நடிகர் அதர்வா முரளி நடிப்பில் தற்போது அடுத்தடுத்து இரண்டு படங்கள் உருவாகி வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் அதர்வா முரளி இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்தப் படத்தை இயக்குநரும் தயாரிப்பாளருமான கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது.

Also Read… KHxRK போன்ற ஒரு படத்தில் பணியாற்றுவது எங்களுக்கு ஒரு சிறப்பான தருணம் – அனிருத்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல… 21 ஆண்டுகளைக் கடந்தது நடிகர் விஜயின் சச்சின் படம்!

Follow Us
வெறும் 9 ரூபாய் சம்பள உயர்வு.. இணையத்தில் வைரலாகும் பதிவு..
பெங்களூருவில் 500 ரூபாயில் வாழ முடியும் - வைரலாகும் பெண்ணின் அனுபவம்
கிளினிக்குள் சிக்கிய சிறுவன்: இணையத்தில் வைரலாகும் வீடியோ..
காதலனுக்காக பெற்றோருக்கு விஷம் கொடுத்த சிறுமி.. இணையத்தில் கசிந்த ஆடியோ..