Durai Senthilkumar: அரசன் படம் சூப்பராக வந்துருக்கு – அப்டேட் கொடுத்த இயக்குநர் துரை செந்தில்குமார்!

Dhurai Senthilkumar About Arasan Movie: நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் 49வது திரைப்படமாக மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவருவதுதான் அரசன். அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த லீடர் பட இயக்குநர் துரை செந்தில்குமார், அரசன் படம் குறித்து அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Durai Senthilkumar: அரசன் படம் சூப்பராக வந்துருக்கு - அப்டேட் கொடுத்த இயக்குநர் துரை செந்தில்குமார்!

அரசன் படம் பற்றி துரை செந்தில்குமார்

Updated On: 

02 Apr 2026 15:58 PM

 IST

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் துரை செந்தில்குமார் (Dhurai Senthilkumar). இவர் தமிழில் தனுஷ் (Dhanush), சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan), சூரி போன்ற பல்வேறு நடிகர்களுடன் திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும் வெற்றிமாறனின் (Vetrimaaran) துணை இயக்குநராகவும் விடுதலை 1 மற்றும் பார்ட் 2 போன்ற திரைப்படங்களிலுமே பணியாற்றியுள்ளார். அந்த விதத்தில் இவரின் இயக்கத்தில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள புது படம்தான் லீடர் (Leader). இதில் நடிகரும், தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணன் (Legend saravanan) நாயகனாக நடித்துள்ளார். இவரின் நடிப்பில் உருவாகியுள்ள இதில் நடிகர்கள் ஷாம், ஆண்ட்ரியா, பாயல் ராஜ்புட், லால்,அம்ரிதா ஐயர் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2026 ஏப்ரல் 3ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அந்த விதத்தில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சிறப்பாகவே நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் துரை செந்தில்குமார் கலந்துகொண்டிருந்தனர். அதில் அவர், சிலம்பரசனின் (Silambarasan) அரசன் திரைப்படம் (Arasan) குறித்து சூப்பர் அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மலையாள சினிமா வரலாற்றில் முதன்முறையாக… நேரடியாக தியேட்டரில் வெளியாகும் பேட்ரியாட் படத்தின் ட்ரெய்லர்

சிலம்பரசனின் அரசன் திரைப்படம் குறித்து இயக்குநர் துரை செந்தில்குமார் பேச்சு:

அந்த நேர்காணலில் பேசிய அவர், “அரசன் திரைப்படத்தின் முதல் இரு ஷெட்யூல் காட்சிகளையும் பார்த்துவிட்டேன், மிகவும் அருமையாக வந்துள்ளது. அரசன் பட ஸ்கிரிப்ட் குறித்தும் வெற்றிமாறன் சார் கூறியிருந்தார், நன்றாக இருந்தது. கண்டிப்பாக அந்த படத்திற்காக எல்லாருமே காத்திருக்கலாம். அரசன் படம் காத்திருப்புக்கு ஒர்த்தான படம்” என அதில் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அர்ஜுன் தாஸின் ஒன்ஸ் மோர் படத்திலிருந்து வெளியானது டீசர்

லீடர் திரைப்படம் குறித்து இயக்குநர் துரை செந்தில்குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

வெற்றிமாறனின் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துவரும் பிரம்மாண்ட திரைப்படம்தான் அரசன். இந்த படத்தில் சிலம்பரசன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா என பல்வேறு உச்ச நடிகர்கள் இணைந்து நடித்துவருகிறார்கள். இதற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துவரும் நிலையில், இப்படத்தின் பாடல்கள் மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி, இரண்டவது கட்ட ஷூட்டிங் பணிகள் தொடங்கியுள்ளது.

அந்த விதத்தில் இப்படத்தை வரும் 2026 ஆண்டு தீபாவளியை முன்னிட்டு படக்குழு வெளியிடமுடிவு செய்துள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகளும் வரும் 2026 மே மாதத்திற்குள் நிறைவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் விரைவில் படக்குழு வெளியிடும் என வட்டாரங்கள் கூறுகிறது.

Follow Us
Related Stories
எனக்கு ரொம்ப பிடிச்சது கமல் சாரின் அந்தப் படம் தான்… மனம் திறந்து பேசிய சாய் அபயங்கர்
Samantha: கீர்த்தி சுரேஷிற்கு குடிப்பழக்கம் இருக்கா? எனக்கு தெரிந்தவரை அந்த பழக்கம் இருக்கு – ரகசியம் பகிர்ந்த சமந்தா!
ஆட்சியும் மாறும்… காட்சியும் மாறும்… TN 2026 படத்தின் டீசர் இதோ!
விஜய் டிவியில் இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட்.. முதலிடத்தில் இருக்கும் சீரியல் எது தெரியுமா?
Ramayana: ‘இந்த தருணத்தை அடைய எனக்கு 7 ஆண்டுகள் ஆனது’ – ராமாயணா படம் குறித்து இயக்குநர் நிதேஷ் திவாரி பேச்சு!
சம்பவம் செய்யும் வேலைய எல்லாம் அஞ்சாறு வாரம் ஒத்தி போடு – 5 ஆண்டுகளைக் கடந்தது கார்த்தியின் சுல்தான் படம்
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..