Atlee: மீண்டும் இணையும் கூட்டணி.. அட்லீ இணையும் புது படம் யாருடன் தெரியுமா?

Atlee Next Film: பான் இந்திய சினிமாவில் தற்போது பிரபல இயக்குநர்களில் ஓடுவராக இருப்பவர் அட்லீ குமார். இவர் அல்லு அர்ஜூனுடன் ராக்கா படத்தில் பணியாற்றிவரும் நிலையில், இதையடுத்து பாலிவுட் நடிகரை கொண்டு புதிய திரைப்படத்தை இயக்குகிறாரா? அது யார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Atlee: மீண்டும் இணையும் கூட்டணி.. அட்லீ இணையும் புது படம் யாருடன் தெரியுமா?

அட்லீ

Updated On: 

24 Apr 2026 17:19 PM

 IST

தமிழ் சினிமாவில் இயக்குநர் எஸ்.சங்கரின் (S Shankar) உதவி இயக்குநராக பணியாற்றி, பின் இயக்குநராக அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்திருந்தனர் அட்லீ குமார். தமிழில் ராஜா ராணி (Raja Rani) என்ற படத்தை இயக்கி, இயக்குநராக நுழைந்த நிலையில், அதை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் (Thalapathy Vijay) மட்டுமே 3 படங்கள் தொடர்ந்து இயக்கியிருந்தார். தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற படங்களை இயக்கி மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டிருந்தார். இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ, ஷாருக்கானை (Shah Rukh Khan) கொண்டு ஜவான் (Jawan) என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது கிட்டத்தட்ட ரூ 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இதையடுத்து தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனை (Allu Arjun) கொண்டு, ராக்கா (Raaka) என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

இந்த படமானது கிட்டத்தட்ட ஹாலிவுட் பட ரேஞ்சில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. இந்த படமானது கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் இப்படத்தை அடுத்ததாக மீண்டும் பாலிவுட் நடிகரின் படத்தை இயக்கவுள்ளாராம்.

இதையும் படிங்க: மதுரை மக்களே ரெடியா இருக்கீங்களா? – வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி எக்ஸ் பதிவு

மீண்டும் இந்தி நடிகரின் படத்தை இயக்கும் அட்லீ குமார்:

இயக்குநர் அட்லீ, அல்லு அர்ஜுனின் ராக்கா படத்திற்கு பிறகு மீண்டும் ஷாருக்கானுடன் படத்தில் இணையவுள்ளாராம். ஏற்கனவே ஜவான் படத்தில் இந்த இருவரின் கூட்டணி இணைந்திருந்த நிலையில், மீண்டும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ஷாருக்கான் தற்போது கிங் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்துவருகிறார்.

இதையும் படிங்க: வாக்களிக்கும் போது கமல் ஹாசன் – ஸ்ருதி ஹசனுக்கு விஐபி சலுகை… கிளம்பியது சர்ச்சை!

இதையடுத்து அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் இணைவார் என கூறப்படுகிறது. இப்படத்திற்காக இயக்குநர் அட்லீக்கு ரூ 100 கோடிகளுக்கு மேல் சம்பளம் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ஷாருக்கான் மற்றும் அட்லீ எந்த தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் அட்லீ குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இயக்குநர் அட்லீ தற்போது ராக்கா பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேல் நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2027ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இப்படமானது வெளியாகும் என கூறப்படுகிறது. இதில் நடிகை தீபிகா படுகோன்தான் நாயகியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
சீனாவிலிருந்து ஈரானுக்கு சென்ற கப்பல் பறிமுதல்: ஏவுகணை இரசாயனங்கள் குறித்த அதிர்ச்சி குற்றச்சாட்டு!
படத்தை மிஞ்சும் நிஜ சம்பவம்.. நோயாளிக்கு சிகிச்சை அளித்த பாதுகாப்பு காவலர்..
ஹைதராபாத் குறித்து பெண் பகிர்ந்த அனுபவம்.. இணையத்தில் வைரல்.
ஹைதராபாதில் வினோத சம்பவம்.. காக்கை விலைக்கு வாங்கிய நிகழ்வு..