Ashwath Marimuthu: STR51-ல் சந்தானம் இருக்காரு.. படத்தின் மைய கருத்து இதுதான் – அஷ்வத் மாரிமுத்து கொடுத்த அப்டேட்!
STR51 Movie Update: தமிழில் தற்போது பிரபலமான இயக்குநர்கள் வரிசையில் ஒருவராக இருப்பவர் அஷ்வத் மாரிமுத்து. இவர் விரைவில் சிலம்பரசனின் STR51 என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில், பேசிய இவர் இப்படத்தில் சந்தானம் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

சிம்பு அஷ்வத் மாரிமுத்து மற்றும் சந்தானம்
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக வளர்ந்துவருகிறார். இவரின் இயக்கத்தில் இதுவரை 2 படங்கள் மட்டுமே வெளியாகியிருந்தாலும், ஒவ்வொரு படமும் தரமாகவே இருந்தது. இவரின் இயக்கத்தில் கடந்த 2025ம் ஆண்டில் டிராகன் (Dragon) என்ற படமானது இறுதியாக வெளியாகியிருந்தது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருந்த நிலையில், அனுபமா மற்றும் கயாடு லோஹர் இணைந்து நடித்திருந்தனர். சிறப்பான கருத்துக்களுடன் வெளியான இந்த படமானது கிட்டத்தட்ட ரூ100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்ததாக இவர் சிலம்பரசனுடன் (Silambarasan) புது படத்தில் இணைவதாக கூறிய நிலையில், அப்படம் தற்காலிகமாக “STR51” என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த படமானது வித்தியாசமான பேண்டஸி கதையில் தயாராகவுள்ளது. சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, அதில் STR51 படத்தில் நடிகர் சந்தானம் (Santhanam) முக்கிய வேடத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் STR51 படத்தின் கருத்து குறித்தும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பணம் கொடுக்கும் நவீன மிஷின்.. வெளியானது அர்ஜுன் தாஸின் ‘கான் சிட்டி’ பட டைட்டில் டீசர்!
சிலம்பரசனின் STR51 திரைப்படம் குறித்த சூப்பர் அப்டேட் கொடுத்த அஷ்வத் மாரிமுத்து:
அந்த நிகழ்ச்சியில் பேசிய அஷ்வத் மாரிமுத்து, “STR51 படத்தில் பல சிறப்பான பாடல்கள் இருக்கிறது. சிறப்பான கதையும் அமைந்துள்ளது. இதன் கதையே சொர்க்கம் என்றால் என்ன? என்பதை மையப்படுத்திதான் இருக்கும். டிராகன் படத்தில் தவறு செய்வது பற்றியும், ஒரு தவறு செய்தால் அது எப்படி துரத்தும் என்பது பற்றியும் சொல்லியிருந்தோம். அதைப்போல சொர்க்கம் என்றால் என்ன, எப்படி இருக்கும் என்பதுதான் STR51 பட கருத்து. இது கருத்து சொல்லாத, ஒரு அழகான கருத்து படமாக இருக்கும். நிறைய விஷயம் இருக்கு, இந்த் படத்தில் சந்தானம் இருக்காரு.
இதையும் படிங்க: நான் அந்த நடிகரின் மிகப்பெரிய ரசிகை.. எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது – அனஸ்வரா ராஜன்!
சந்தானம் மற்றும் சிலம்பரசன் காம்போ இப்படத்தில் இருக்கிறது. இந்த விஷயத்தை இப்போதுதான் முதல் முறையாக சொல்கிறேன். மேலும் அனைவருக்கும் பிடித்த இசையமைப்பாளரும் இப்படத்தில் இருக்காரு. கதாநாயகி யாருன்னு சொல்லமுடியாது, ஏன்னென்றால் இன்னும் அது உறுதியாகவில்லை. இந்த படத்தில் நிறைய ஹீரோயின் இருக்காங்க. நான் விட்டால் சொல்லிக்கொண்டே போவேன், வேண்டாம்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
சிலம்பரசனின் STR51 பட அப்டேட் குறித்து அஷ்வத் மாரிமுத்து பேசிய வீடியோ பதிவு:
#Ashwath about #STR51 ✨️
– #SilambarasanTR is set to dance again after a long time! 💥 #Santhanam is also part of the film.
– Your favourite music director is on board.
– The heroine hasn’t been confirmed yet, but the film will feature multiple heroines.pic.twitter.com/S96mvy8OHd— Movie Tamil (@_MovieTamil) March 6, 2026
சிலம்பரசனின் இந்த 51வது படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்க, ஏ.ஜி.எஸ்.எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்கும் என ஏற்கனவே படக்குழு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.