கர படத்தில் தெலுங்கு டப்பிங் பேசியது குறித்து கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

Director and Actor KS Ravikumar talks about Kara movie: தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் இயக்குநராக வலம் வந்தவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் சமீப காலமாக அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் கர படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.

கர படத்தில் தெலுங்கு டப்பிங் பேசியது குறித்து கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

கர

Published: 

18 Apr 2026 11:59 AM

 IST

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களிடையே அதிக அளவில் பிரபலமான இயக்குநராக இருப்பவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். மேலும் 90களில் பிறந்தவர்களுக்கு சினிமாவில் கேமியோ என்பதை அறிமுகம் செய்து வைத்ததில் மிகப்பெரிய பங்கு இவருக்கு உள்ளது என்றே சொல்லலாம். அப்படி தான் இயக்கும் படங்கள் அனைத்திலும் ஏதாவது ஒரு கதாப்பாத்திரத்தில் அவர் நிச்சயமாக காட்சியளித்து விடுவார். மேலும் அந்தப் படத்தில் கே.எஸ்.ரவிக்குமாரின் அந்த கேமியோ ரோல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தொடர்ந்து படங்களை இயக்கி நடித்து வந்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சமீப காலமாக படங்களை இயக்குவதில் இருந்து விலகி தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தனுஷ் உடன் இணைந்து கர படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தினை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி உள்ள நிலையில் படம் வருகின்ற 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தில் நடித்த நடிகர்கள் தொடர்ந்து படம் தொடர்பாக பேட்டிகளில் பேசி வருவது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் கே.எஸ்.ரவிக்குமார் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கர படம் குறித்து கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்:

கர திரைப்படத்தில், ஆரம்பத்தில் 2 அல்லது 3 வெவ்வேறு நபர்கள் தெலுங்கு டப்பிங் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். பின்னர், தெலுங்கு டப்பிங் பொறுப்பாளர் என்னை அணுகி, சார், நான் இந்தப் படத்தை தமிழில் பார்த்தபோது எனக்கு முழுமையான திருப்தி ஏற்படவில்லை. நீங்களே உங்கள் கதாபாத்திரத்திற்குப் பின்னணிக் குரல் கொடுக்க விரும்புகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு நான், சார், நான் சுமார் 5 தெலுங்குப் படங்களை இயக்கியிருந்தாலும், அங்கு எனக்கு அனுபவம் இருந்தாலும், இது மிகவும் கடினமான ஒரு காரியம், என்று அவரிடம் கூறினேன்.

சமீபத்தில், உஸ்தாத் பகத் சிங் என்ற படத்தில் நான் நடித்திருந்தேன்; அதில் நான் ஒரு முதலமைச்சர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தேன். அந்தப் படத்தில், எனது வசனங்களை முழுவதுமாகத் தமிழிலேயே பேசி நடித்திருந்தேன். படப்பிடிப்பு முடிந்ததும் நான் திரும்பி வந்துவிட்டேன்; ஆனால், தெலுங்கு மொழிமாற்றப் பணிகளுக்காக அவர்கள் என்னை அழைக்கவே இல்லை ஏனெனில், எனக்குத் தெலுங்கு மொழியில் சரளமாகப் பேச வராது என்பது அவர்களுக்கே நன்றாகத் தெரியும் என்றும் தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… LIK படம் 8 ஆண்டுகளுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியது – விக்னேஷ் சிவன் ஓபன் டாக்

இணையத்தில் வைரலாகும் கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு:

Also Read… நான் இயக்குநர்கள் பாலா மற்றும் பா. ரஞ்சித்தை முழுமையாக நம்புவேன் – நடிகர் ஆர்யா

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..