லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இணையும் அனுஷ்கா ஷெட்டி?

Actress Anushka Shetty: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் காட்டி படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இணையும் அனுஷ்கா ஷெட்டி?

அனுஷ்கா ஷெட்டி

Published: 

11 Jun 2025 13:30 PM

 IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமா வரலாற்றில் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற பெயரை தொடங்கி வைத்த பெருமை இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு (Director Lokesh Kanagaraj) உள்ளது. வெளிநாடுகளில் இந்த சினிமாட்டிக் யுனிவர்ஸ் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே புழக்கத்தில் இருந்தாலும் இந்திய சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிச்சையமானது என்னமோ லோகேஷ் கனகராஜின் படங்களுக்குப் பிறகு தான். இந்த லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் முன்னதா தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் மட்டும் இன்றி இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்களும் நடித்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது நடிகை அனுஷ்கா ஷெட்டி (Actress Anushka Shetty) இணைய உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LCU-வில் இணையும் நடிகை அனுஷ்கா ஷெட்டி?

பான் இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் தமிழ், தெலுங்கு என்று இந்த இரண்டு மொழிகளில் அதிகமாக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தற்போது மலையாள சினிமாவிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை அனுஷ்கா ஷெட்டி இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இணைய உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. அதன்படி நடிகை அனுஷ்கா ஷெட்டி கைதி 2 படத்தில் இணைந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்தப் படத்தில் இவர் லேடி கேங்ஸ்டராக நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் இன்ஸ்டா பதிவு:

அனுஷ்கா ஷெட்டியை பான் இந்திய அளவில் பிரபலமாக்கிய படங்கள்:

யோகா டீச்சராக இருந்த அனுஷ்கா ஷெட்டி நடிகையாக அறிமுகம் ஆனது முதன்முதலில் தெலுங்கு சினிமாவில் தான். 2005-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆன இவர் அதனைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியான இரண்டு படங்கள் பான் இந்திய அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி 2009-ம் ஆண்டு நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் வெளியான அருந்ததி மற்றும் 2015-ம் ஆண்டு வெளியான பாகுபலி படங்கள் பான் இந்திய அளவில் பிரபலம் ஆக்கியது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
OTT Movie: வயது மூத்த பெண்ணின் மீது ஆசைப்படும் பேய்.. விறுவிறுப்பாக இருக்கும் இந்த படத்தை பாத்திருக்கீங்களா? எந்த ஓடிடியில் இருக்கு தெரியுமா?
Mohanlal: இயக்குநர் பிரியதர்ஷனின் 100-வது திரைப்படத்தில் இணைந்த மோகன்லால் – வைரலாகும் பதிவு!
Sreeleela: அதனால் பலமுறை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.. இப்போது அதை சமாளிக்க கற்றுக்கொண்டேன் – ஸ்ரீலீலா!
RJ Balaji: கருப்பு பட கதையை முதலில் விஜய் சாரிடம்தான் சொன்னேன் – உண்மையை உடைத்த ஆர்.ஜே.பாலாஜி!
Marshal: மார்ஷல் பட ரிலீஸ் எப்போது? கதை இதுதான்! – இயக்குநர் தமிழ் கொடுத்த அப்டேட்!
Ashwath Marimuthu: பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் எடுக்க காரணம் இதுதான் – அஷ்வத் மாரிமுத்து ஓபன் டாக்!
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..