டிக்கெட் முன்பதிவை தொடங்கியது பைசன் காளமாடன் படக்குழு – இயக்குநர் மாரி செல்வராஜ் கொடுத்த அப்டேட்

Bison Kaalamaadan Movie: நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பைசன் காளமாடன். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

டிக்கெட் முன்பதிவை தொடங்கியது பைசன் காளமாடன் படக்குழு - இயக்குநர் மாரி செல்வராஜ் கொடுத்த அப்டேட்

பைசன் காளமாடன்

Published: 

15 Oct 2025 18:25 PM

 IST

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 5-வதாக உருவாகியுள்ள படம் பைசன் காளமாடன். இயக்குநர் மாரி செல்வராஜ் (Director Mari Selvaraj) எழுதி இயக்கி உள்ள இந்த பைசன் காளமாடன் படத்தின் நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். இது இவரது நடிப்பில் வெளியாகும் முக்கியப் படம் ஆகும். முன்னதாக நடித்த இரண்டு படங்களில் ஒன்று ரீமேக்காவும் மற்றும் ஒன்று அவரது தந்தை விக்ரமுடனும் இணைந்து நடித்து இருந்தார். அதன் காரணமாக நடிகர் துருவ் விக்ரமிற்கு முக்கியப் படமாக இந்த பைசன் காளமாடன் அமைந்துள்ளது. இந்தப் படம் ஒரு ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகியுள்ளது. கபடி விளையட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்திற்காக நடிகர் துருவ் விக்ரம் கபடி விளையாட்டை முறைப்படி கற்றுக்கொண்டார். இதுக்காக அவர் ஒரு வருடத்திற்கு மேலாக கபடி விளையாட்டைக் கற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. அதன்படி பைசன் காளமாடன் படம் ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள நிலையில் படத்தில் கபடி வீரராக நடிகர் துருவ் விக்ரம் நடித்துள்ளார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த நடிகர் துருவ் விக்ரம் தனது கனவுகளுக்காக எத்தனை துன்பங்களை சந்திக்க நேர்கிறது என்பதே படத்தின் கதை. இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் படம் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

டிக்கெட் முன்பதிவை தொடங்கியது பைசன் காளமாடன்:

இந்த நிலையில் படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 17-ம் தேதி அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பைசன் காளமாடன் படத்தின் டிக்கெட் முன்பதிவை தொடங்கியுள்ளதாக படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… டியூட் படத்தின் டிக்கெட் முன்பதிவு எப்போட் தொடங்குது தெரியுமா? அப்டேட் கொடுத்த படக்குழு

இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இட்லி கடை படத்திலிருந்து வெளியானது எஞ்சாமி தந்தானே வீடியோ பாடல்