OTT Update: தனுஷின் தேரே இஷ்க் மே படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட் இதோ!
Tere Ishq Mein OTT Update: நடிகர் தனுஷின் நடிப்பில் 2025ம் ஆண்டில் வெளியாகி அதிக வசூல் பெற்ற திரைப்படம்தான் தேரே இஷ்க் மே. இந்த படத்தை பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கி வெற்றியை கொடுத்தார். இந்த படமானது 2025 நவம்பர் இறுதியில் வெளியான நிலையில், இப்படம் எந்த ஓடிடியில், எப்போது வெளியாகிறது என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தனுஷின் தேரே இஷ்க் மே
தமிழ் சினிமாவில் கலக்கிவரும் நடிகராகவும், இயக்குநராகவும் இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் மட்டும் இந்த 2025ம் ஆண்டில் கிட்டத்தட்ட 3 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளை அடிப்படையாக கொண்டு இந்த படங்களை வெளியாகியிருந்தது. இதில் பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் (Anand L Rai) இயக்கத்தில் இவர் நடித்திருந்த திரைப்படம்தான் தேரே இஷ்க் மே (Tere Ishq Mein). இந்த படமானது தனுஷின் நடிப்பில் 3வது வெளியாகியுள்ள இந்தி திரைப்படமாகும். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் (Kriti Sanon) நடித்திருந்தார். இந்த படமானது ஜென் ஸீ காலத்தின் காதல் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் தனுஷ் விமானப்படை அதிகாரியாக நடித்திருந்ர். இந்த படமானது கடந்த 2025 நவம்பர் 28ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட 3 வாரத்தை கடந்துள்ள நிலையில், எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. அதன்படி, வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதியில் நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்களை எதுவும் வெளியாகாவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரிலீஸிற்கு முன்பே சிறை பட இயக்குநருக்கு கார் பரிசு.. தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்!
தனுஷின் தேரே இஷ்க் மே திரைப்படம் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட பதிவு :
Aawaara Angaara, from the album #TereIshkMein, now at #1 on the Billboard India Songs chart.
Gratitude for every ear that listened, every heart that resonated, and to my entire team. 🫶#EPI#AawaaraAngaara Listen now: https://t.co/LtaLefdeMD@aanandlrai @Irshad_kamil… pic.twitter.com/rj8j3X9T9u
— A.R.Rahman (@arrahman) December 23, 2025
தேரே இஷ்க் மே திரைப்படமானது ரசிகர்களிடையே பாசிடிவ் விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படமானது கடந்த 2015ம் ஆண்டில் வெளியான ராஞ்சனா படத்தின் கதைக்களத்திபோல வித்தியாசமான காதல் கதைக்களத்தில் இந்த் படமும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் தனுஷின் கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது தமிழ் மொழியில் ரசிகர்களிடையே திரையரங்குகளில் அந்தளவிற்கு வரவேற்பை பெறவில்லை, அதற்கு மாற்றாக இந்தி மொழியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படம் தற்போதுவரியிலும் சில திரையரங்குகளில் வெளியிடப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மெய்யழகன் பட கதையை அந்த இரு நடிகர்களை மனதில் வைத்து எழுதினேன்- இயக்குநர் சி.பிரேம் குமார்!
அந்த வகையில் இப்படம் மொத்தமாக சுமார் ரூ 161 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்ததாக படக்குழு அறிவித்திருந்தது. மேலும் மொத்தமாக தற்போதுவரை சுமார் ரூ 170 கோடிகளை கடந்து இப்படம் வசூல் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரணமாக திரைப்படங்கள் வெளியாகி 4 முதல் 6 வாரங்களில் ஓடிடியில் வெளியாகிவிடும் என்றார் நிலையில், இந்த படமானது சுமார் 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாகவுள்ளது. அதன்படி வரும் 2026ம் ஆண்டு ஜனவரியில் 23ம் தேதியில் ஓடிடியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.