Kara Movie: தனுஷின் ‘கர’ திரைப்படத்தின் முதல் பாடல்.. படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்!
Kara Movie First Song Update: பான் இந்திய பிரபல கதாநாயகனாக கலக்கிவருபவர் தனுஷ். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயரிப்பின் கீழ், இயக்குநர் விக்னேஷ் ராஜா தயாரித்துள்ள படம்தான் கர. இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கிய நிலையில், படத்தின் முதல் பாடல் அறிவிப்பு எப்போது வெளியாகும் என படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது.

தனுஷின் கர திரைப்படம்
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக திகழல்பவர் தனுஷ் (Dhanush). இவர் தமிழ் சினிமாவின் பெருமையையும் கடந்து, பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என உலகப்புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் இறுதியாக தேரே இஷ்க் மே (Tere Ishq Mein) என்ற இந்தி படத்தில் நடித்திருந்த நிலையில், கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகி ரூ 150 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்திருந்தது. அந்த வகையில் இவர் தொடர்ந்து டி54 (D54) என்ற திரைப்படத்தில் நடித்துவந்தார். இப்படம்தான் “கர” (Kara). இதை போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்கிய நிலையில், வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனத்தின் கீழ் ஐசரி கே கணேஷ் (Isari K Ganesh) தயாரித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு தொடங்கிய நிலையில், மிகவும் சிறப்பாகவே நடைபெற்றுவந்தது. இப்படத்தில் தனுஷ் லீட் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார்.
மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைத்துவரும் நிலையில், முதல் பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அந்த வகையில் கர படத்தின் முதல் பாடல் ரிலீஸ் எப்போடித்து என்ற அறிவிப்பு, நாளை 2026 மார்ச் 13ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கொரியாவிற்கு அழைத்து சென்றாரா பிரியங்கா மோகன்.. மேட் இன் கொரியா படம் எப்படி இருக்கிறது? – விமர்சனங்கள் இதோ!
தனுஷின் கர திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு:
Sound check…
Watch this space tomorrow 5 PM 🎵
— Vels Film International (@VelsFilmIntl) March 12, 2026
தனுஷின் கர திரைப்படமானது ஒரு வித்தியாசமான திரில்லர் கதையில் தயாராகியுள்ளது. இதில் தனுஷ் மற்றும் மமிதா பைஜுவுடன் நடிகர்கள் ஜெயராம், சுராஜ் வெஞ்சாரமூடு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் தனுஷ் “கரசாமி” என்ற வேடத்தில் நடித்துள்ளார். இப்படமானது முற்றிலும் திருப்பங்களுடன், வித்தியாசமான படமாகவே தயாராகியுள்ளதாம்.
இதையும் படிங்க: ரிலீஸ் தேதியுடன் ட்ரெய்லரை வெளியிட முடிவு செய்துள்ளது ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படக்குழு
இப்படத்தில் தனுஷின் கதாபாத்திரம் பழைய பகைக்கு பழிவாங்கும் ஒருவராக அமைந்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக இருக்கிறது. மேலும் இப்படமானது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளதாம். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.