Idly Kadai : தனுஷின் ‘இட்லி கடை’ படத்தில் கேமியோ ரோலில் அந்த நடிகரா? வைரலாகும் தகவல்!

Idly Kadai Movie Update : தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல், பான் இந்திய நடிகர்களில் ஒருவர்தான் தனுஷ். இவரின் முன்னணி நடிப்பில் குபேரா படத்தை அடுத்தது வெளியாகக் காத்திருப்பது இட்லி கடை படம். இந்த படத்தில் பிரபல நடிகர் ஒருவர் சிறப்பு வேடத்தில் நடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Idly Kadai : தனுஷின் இட்லி கடை படத்தில் கேமியோ ரோலில் அந்த நடிகரா? வைரலாகும் தகவல்!

தனுஷின் இட்லி கடை

Published: 

16 Aug 2025 21:09 PM

நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிப் படங்கள் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வரும் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் குபேரா (Kuberaa). தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் வெளியான இப்படம், தெலுங்கில் மக்களிடையே வரவேற்பைப் பெற்றாலும், தமிழில் ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பைப் பெறவில்லை. இந்த படத்தை அடுத்து இவரின் நடிப்பில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் படம் இட்லி கடை (Idly Kadai). இந்த படத்தை நடிகர் தனுஷே இயக்கி, அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இப்படமானது கிராமத்துக் கதைக்களம் கொண்ட படமாக உருவாகியிருக்கிறது.

இந்நிலையில், இந்த படத்தில் பிரபல நடிகர் ஒருவர் கேமியோ ரோலில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த நடிகர் வேறு யாருமில்லை, பிரபல நடிகர் மற்றும் இயக்குநரான ஆர். பார்த்திபன்தான் (R. Parthiban). இவர்தான் இப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார் என இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : கூலி vs வார் 2.. வசூலில் முந்தியது யார்? – வெளியான அப்டேட்!

இட்லி கடை திரைப்படத்தின் புரோமோஷன் பணிகள் துவக்கம் :

நடிகர் தனுஷின் இட்லி கடை படமானது வரும் 2025, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். இவர்கள் இருவரின் ஜோடி இப்படத்தின் மூலம் இரண்டாவதாக இணைந்துள்ளது. மேலும் இவர்களுடன் நடிகர்களாக அருண் விஜய், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி, ராஜ்கிரண், வடிவுக்கரசி மற்றும் சத்யராஜ் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க : அட்டகத்தி தினேஷ்- கலையரசனின் ‘தண்டகாரண்யம்’ – வெளியான அப்டேட்! 

இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட எடிட்டிங் வேலைகளிலிருந்து வருகிறது. இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில வாரங்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தொடங்கியுள்ளது. இது குறித்த பதிவை இட்லி கடை படக்குழு வெளியிட்டுள்ளது.

இட்லி கடை படத்தின் புரோமோஷன் பணிகள் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, டான் பிக்ச்சர்ஸ் மற்றும்  வுண்டர்பார் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திலிருந்து என்ன சுகம் என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. மேலும் இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.