Idli Kadai: தனுஷின் ‘இட்லி கடை’ படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? வெளியான சென்சார் அப்டேட் இதோ
Idli Kadai Movie Update: நடிகர் தனுஷின் முன்னணி இயக்கத்தில் மற்றும் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் இட்லி கடை. இந்த படமானது வரும் 2024, அக்டோபர் 1ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை யாரெல்லாம், பார்க்கலாம் என்பது பற்றிய சென்சார் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்து விளக்கமாக பார்க்கலாம்.

தனுஷின் இட்லி கடை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தெலுங்கில் வெற்றி பெற்ற படம் குபேரா (Kuberaa). இந்த படத்தை அடுத்து, இவரின் 52வது படமாக வெளியாக காத்திருப்பது இட்லி கடை (Idli Kadai) திரைப்படம். இந்த படத்தை தனுஷ் இயக்கி, அதில் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். இதில் அவருக்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் (Arun VIjay) நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த இட்லி கடை படமானது கிராமம் பின்னணியில் உருவாகியுள்ளது. இதில் தனுஷிற்கு ஜோடியாக நித்யா மேனன் (Nithya Menen) மற்றும் ஷாலினி பாண்டே (Shalini Pandey) என இரு நடிகைகள் நடித்திருகின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகரக்ள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது, அதை தொடர்ந்து தற்போது இப்படத்தில் இருந்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தனுஷின் இந்த இட்லி கடை படத்திற்கு சென்சார் குழு “யு” (U) சான்றிதழை வழங்கியுள்ளது. இது பற்றி விவரமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : சைமா விருதுகளுடன் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் – இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!
இட்லி கடை படத்தின் சென்சார் அப்டேட் பதிவு :
It’s a Clean U for #IdliKadai #IdliKadai from 1st October, in theatres worldwide 📽️@dhanushkraja @arunvijayno1 @RedGiantMovies_ @gvprakash @menennithya @aakashbaskaran @thesreyas @wunderbarfilms @saregamasouth @dancersatz @MShenbagamoort3 @kavya_sriram @Kiran10koushik… pic.twitter.com/FS5pdpFZEJ
— DawnPictures (@DawnPicturesOff) September 22, 2025
இட்லி கடை படத்தை யாரெல்லாம் பார்க்கலாம் ?
நடிகர் தனுஷ் மற்றும் நித்யா மேனனின் கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக இந்த இட்லி கடை படமானது தயாராகியுள்ளது. இதை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் டான் பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட ரூ 120 கோடி பட்ஜெட்டில் இப்படமானது உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : கைதி 2 படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா? வைரலாகும் தகவல்
இந்நிலையில் இப்படத்திற்கு சென்சார் குழு, யு (U) சான்றிதழை கொடுத்துள்ளது, அதன்படி இட்லி கடை படத்தை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாக்கலாம் . இந்த படமானது நிச்சயமாக ஃபேமிலி எண்டர்டெயின்மென்ட் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இட்லி கடை படத்தின் ஓடிடி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
இந்த இட்லி கடை படத்திற்கு நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து மொத்தமாக 3 பாடல்கள் வெளியாகி தற்போது வரையிலும் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை, அமேசான் ப்ரைம் நிறுவனமானது பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் ரூ 45 கோடிகளைக் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை.