தனுஷின் 54-வது படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்
Dhanush 54 Movie Update: தமிழ் சினிமா முதல் ஹாலிவுட் சினிமா வரை பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் தனுஷ் 54. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் 54
தமிழ் சினிமாவில் இயக்குநரின் மகனாக அறிமுகம் ஆனார் நடிகர் தனுஷ். இவர் நாயகனாக அறிமுகம் ஆன போது பல நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்று வந்தார். தனது கடின உழைப்பின் காரணமாக தன் மீது வந்த நெகட்டிவான விமர்சனங்கள் அனைத்தையும் பாசிட்டிவான விமர்சனமான மாற்றினார் நடிகர் தனுஷ். அது மட்டும் இன்றி கோலிவுட் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது ஹாலிவுட் வரை தனது நடிப்புத் திறமையால் உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டில் மட்டும் மூன்று மொழிகளில் மூன்று படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி அந்த மூன்று படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் தற்போது தனது 54-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக தனுஷ் 54 என்று பெயர் வைக்கப்படுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம்ஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கி உள்ள நிலையில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கே.எஸ். ரவிக்குமார், சூரஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் 54-வது படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் எப்போது?
இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த தகவல் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… Kamal Haasan: தனது புகைப்படம், பெயரை அனுமதியின்றி பயன்படுத்த தடை கோரி கமல்ஹாசன் வழக்கு!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Dhanush’s #D54 – First Look and Title are most likely to be out as a Pongal Special..🔥 Another Quality film Loading from the Director of Porthozil..🤩 April Release on Cards..🤝 Waiting..💥 pic.twitter.com/DdHKvRNEvS
— Laxmi Kanth (@iammoviebuff007) January 12, 2026
Also Read… தளபதி விஜய் முதல் சிலம்பரசன் வரை.. டாப் 5 நடிகர்களின் 25வது படம் என்னனு தெரியுமா?