நீங்க தெரிஞ்சி பண்ணல… நானும் தெரிஞ்சி பண்ணல.. ஆனால் – கர படம் குறித்து தனுஷ் பேச்சு!

Dhanush After Watching Kara: நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் கூட்டணியில், சிறப்பாக தயார்க்கியுள்ள படம்தான் கர. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கோவை பிரபல மால் ஒன்றில் நடைபெற்றிருந்த நிலையில், அதில் கர படத்தின் முக்கியத்துவம் குறித்து தனுஷ் பேசியுள்ளார்.

நீங்க தெரிஞ்சி பண்ணல... நானும் தெரிஞ்சி பண்ணல.. ஆனால் - கர படம் குறித்து தனுஷ் பேச்சு!

தனுஷ் மற்றும் விக்னேஷ் ராஜா

Updated On: 

25 Apr 2026 20:41 PM

 IST

கோலிவுட் சினிமாவில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான போர் தொழில் (Por Thozhil) என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக நுழைந்தவர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja). இவரின் இயக்கத்தில் 2வது தயாராகியுள்ள திரைப்படம்தான் கர (Kara). இப்படத்தில் தமிழ் நாயகன் தனுஷ் (Dhanush) லீட் நாயகனாக நடித்திருக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இப்படத்தின் மூலமாகதான் இந்த ஜோடி முதல் முறையாக இணைந்துள்ளது. இந்த படமானது ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படமானது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாக தயாராகியுள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றிருந்தது. அதையடுத்ததாக இன்று 2026 ஏப்ரல் 25ம் தேதியில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கோவையில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. அதில் பேசிய தனுஷ், கர படத்தை பார்த்த பிறகு விக்னேஷ் ராஜாவிடம் சொன்ன விஷயம் குறித்து பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: கோடி ரூபா கொடுத்தாலும் அந்த விளம்பரங்களை பண்ணமாட்டேன் – ஜி.வி.பிரகாஷ் குமார் பேச்சு!

கர படத்தை பார்த்தபிறகு விக்னேஷ் ராஜாவிடம் தனுஷ் சொல்லிய விஷயம் :
அதில் தனுஷ் பேசுகையில், “விக்னேஷ்.., நீங்க தெரிஞ்சி பண்ணல.. நாமளும் தெரிஞ்சி பண்ணல. ஆனால் நம்ம ஒரு முக்கியமான திரைப்படத்தை எடுத்திருக்கிறோம். இந்தப் படம் மக்களைச் சென்றடைந்தால், இந்தப் படம் வசூலித்தால், எந்தவிதமான வித்தைகளோ அல்லது டிரெண்டைப் பின்பற்றாமலோ உங்களால் ஒரு பெரிய ஹிட் கொடுக்க முடியும் என்ற பெரும் நம்பிக்கையை இது திரையுலகிற்கு அளிக்கும். என்ன நடக்கிறது என பார்க்கலாம்” என அவர் தெரிவித்திருந்ததாக கூறியிருந்தார்.

இதையும் படிங்க: முதல் பாகத்தை விட ஜெயிலர் 2 படம் மாபெரும் வெற்றியைப் பெறும் – நடிகர் யோகி பாபு

கர திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

தனுஷின் இந்த கர படத்திற்கு யு/ஏ சென்சார் கிடைத்துள்ளது. அதன்படி 16 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் இந்த படத்தை பார்க்கலாம். மேலும் இப்படம் மணிநேரம் மற்றும் 41 நிமிடங்கள் ரன்னிங் டைமை கொண்டுள்ளது. இப்படமானது மெதுவாக செல்லும் ஒரு சுவாரஸ்ய திரில்லர் கதைக்களத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள நிலையில், ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. மேலும் இது தனுஷிற்கு வெற்றிப்படமாக அமையும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us
அதிகரிக்கும் ஈரபதத்துடன் கூடிய வெப்ப அலை - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்த ரயில் நிலையம் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம்.. எங்கு தெரியுமா?
ஆதார் எண் இருந்தால் மட்டும் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியுமா?
தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்த 5 போலீஸ் அதிகாரிகள்