கண்டா வரச்சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க – 5 ஆண்டுகளை நிறைவு செய்தது தனுஷின் கர்ணன் படம்!
5 Years Of Karnan Movie: தமிழ் சினிமாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கர்ணன். இந்தப் படம் தற்போது 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைப் போஸ்டர் வெளியிட்டு படக்குழு கொண்டாடி வருகின்றனர்.

கர்ணன் படம்
தமிழ் சினிமாவில் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கர்ணன். இந்தப் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதி இயக்கி இருந்தார். இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியான இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ரஜிஷா விஜயன் நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் லால், யோகி பாபு, கௌரி ஜி. கிஷன், ஜெகன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, நட்டி சுப்ரமணியம், ஜி.எம்.குமார், டெல்லி கணேஷ், சண்முகராஜன், சிங்கம்புலி, ‘பூ’ ராம், ஜானகி, அழகம் பெருமாள், மதன் குமார் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தினை வி கிரியேஷன்ஸ் சார்பக தயாரிப்பாளர் தாணு தயாரித்து இருந்த நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயாணன் இசையமைத்து இருந்தார். படத்தைப் போல அந்தப் படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பற்றது.
கர்ணன் படம் குறித்து நெகிழ்ச்சி பதிவை வெளியிட்ட இயக்குநர் மாரி செல்வராஜ்:
இந்த கர்ணன் படத்திலும் இயக்குநர் மாரி செல்வராஜ் ஜாதியினால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும் ஒடுக்குமுறைகளையும் வெளிப்படையாக பேசி இருப்பார். இந்தப் படம் இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவன் வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு நினைவு உயிர்பெற்று ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு பயணம் உண்மையாகவே வாழ்ந்து முடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்தப் படத்தில் நடித்த நடிகர் தனுஷ் சாருக்கு மிகவும் நன்றியும் காதலும். மேலும் இந்தப் படதிற்காக உழைத்த தயாரிப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றி என்று மாரி செல்வராஜ் அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… லோகா படக்குழுவினர் என்னை ஏமாற்றிவிட்டார்கள் – நடிகர் மம்முட்டி கலகல பேச்சு
மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
It’s been 5 years since his arrival. 5 years since a memory came to life. 5 years since a journey was truly lived. 💥
Celebrating 5 years of #Karnan 🗡️
Thank you for bringing him to life @dhanushkraja sir! ♥️
Overwhelmed with gratitude @theVcreations #KalaippuliSThanu sir ✨… pic.twitter.com/OQARJ37lAM
— Mari Selvaraj (@mari_selvaraj) April 9, 2026
Also Read… மோகன்லால் முதல் டொவினோ தாமஸ் வரை… கேரளா தேர்தலில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபல நடிகர்கள்