Dhanush: இட்லி கடை படம் அந்த பிரபலத்தின் கதையா? உண்மையை போட்டுடைத்த தனுஷ்!

Dhanush About Idli Kadai Story: தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்ட கதைக்களத்தில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் திரைப்படம்தான் இட்லி கடை. தனுஷின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக இந்த படமானது தயாராகியுள்ளது. இந்த படமானது பிரபல செஃப் மாதம்பட்டி ரங்கராஜன் பயோபிக் என கூறப்பட்டுவந்த நிலையில், அதற்கு தனுஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.

Dhanush: இட்லி கடை படம் அந்த பிரபலத்தின் கதையா? உண்மையை போட்டுடைத்த தனுஷ்!

தனுஷ்

Published: 

26 Sep 2025 12:35 PM

 IST

பான் இந்திய நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தனுஷ் (Dhanush). இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி படங்களிலும் கதாநாயகனாக நடித்து அசத்தி வருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம் இட்லி கடை (Idli Kadai). இந்த படத்தை நடிகர் தனுஷ் இயக்கி, அதில் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த இட்லி கடை படமானது உணவு விடுதி மற்றும் பேமிலி எமோஷனல் போன்ற கதைக்களத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, வில்லனாக நடிகர் அருண் விஜய் (Arun Vijay) நடித்திருகிறார். மேலும் இதில் தனுஷிற்கு ஜோடியாக நித்யா மேனன் (Nithya Menen) மற்றும் ஷாலினி பாண்டே என இரு நடிகைகள் நடித்துள்ளனர். மொத்தத்தில் அசத்தல் பேமிலி எண்டர்டைனர் திரைப்படமாக இந்த இட்லி கடை படமானது தயாராகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் கதையானது பிரபல செஃப் மாதம்பட்டி ரங்கராஜனின் (Chef Madhampatti Rangarajan) கதையா ? என இணையதளங்களில் தகவல்கள் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அதற்கான உண்மையான விளக்கத்தை நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற இட்லி கடை ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், இட்லி கடை படத்தின் கதையை தனது சொந்த கற்பனையில் எழுதியதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : விஜய்யின் நம்பரை இப்படித்தான் சேவ் பண்ணிருக்கேன்- திரிஷா பகிர்ந்த தகவல்! 

இட்லி கடை படத்தின் கதை குறித்து விளக்கம் கொடுத்த தனுஷ் :

அந்த நேர்காணலில் பரிதாபங்கள் புகழ், கோபி மற்றும் சுதாகர் இருவரும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். அதில் மேடையில் தனுஷிடம் அவர்கள், இட்லி கடை படத்தின் கதை கோயம்புத்தூர் பிரபல செஃப் கதையா? என கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த தனுஷ், “அந்த மாதிரி இல்லை, இது என்னுடைய சொந்த கதைதான்.

இதையும் படிங்க : தாய்லாந்திற்கு சிலம்பரசன் – லோகேஷ் கனகராஜ் பயணம் – காரணம் என்ன தெரியுமா?

நான் எனது கிராமத்தில் பார்த்த என் மனதை பாதித்த ஒரிஜினல் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, எனது கற்பனையில் இந்த இட்லி கடை படத்தின் கதையை எழுதியிருக்கிறேன். சொந்தமான கற்பனை கதை மற்றும் ஒரிஜினல் கேரக்டர்ஸ்” என நடிகர் தனுஷ் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இது தொடர்பான தகவல் தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.

இட்லி கடை படத்தின் கதையை பற்றி பேசிய தனுஷ் வீடியோ பதிவு :

தனுஷின் இட்லி கடை படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா :

கிராமத்து கதைக்களத்துடன் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்த இட்லி கடை படமானது தயாராகியுள்ளது. இந்த படத்திற்கு நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளர். இவரின் இசையமைப்பில் இதுவரை 4 பாடல்கள் வீதம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த இட்லி கடை படத்திற்கு சென்சார் குழு யு தரச் சான்றிதழை கொடுத்துள்ளது. அதன்படி சிறுவயது குழந்தைகள் முதல், அனைவரும் பார்க்கலாம். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம்மாக 2 மணி நேரம் 47 நிமிடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.