Kara Movie: திருடனாக தனுஷ்.. சுவாரஸ்ய காட்சிகளுடன் வெளியான கர திரைப்படத்தின் ட்ரெய்லர்!
Kara Movie Trailer: தனுஷின் நடிப்பில் 2026ம் ஆண்டில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்போடு தயாராகியுள்ள படம்தான் கர. இப்படமானது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், அதை முன்னிட்டு இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரில்லர் காட்சிகளுடன் வெளியாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர், ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

தனுஷ் கர திரைப்பட டிரெய்லர்
நடிகர் தனுஷ் (Dhanush) மற்றும் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) ஜோடியாக இணைந்து நடித்துள்ள படம்தான் “கர” (Kara). இந்த படமானது ஆரம்பத்தில் டி54 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்கிவந்தார். இவர் தமிழில் ஏற்கனவே சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடித்திருந்த, கிரைம் திரில்லர் போர் தொழில் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை அடுத்தாக தனுஷுடன் படத்தில் இணைந்திருந்தார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் ஐசரி கே கணேஷ் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் (GV Prakash) இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவரின் இசையமைப்பில் இதுவரை வாயா ஏய் கரசாமி மற்றும் என் கண்ணம்மா என இரு பாடல்கள் வெளியாகியுள்ளது.
அதிரடி திரில்லர் கதைக்களத்தில் இப்படமானது தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியில் இப்படமானது உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் இப்படம் தயாராகியுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரில்லர் மற்றும் சுவாரஸ்யமான காட்சிகளுடன் அமைந்துள்ள இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: தளபதி, மங்காத்தா போன்ற படம் தனுஷின் கர – இயக்குநர் விக்னேஷ் ராஜா பேச்சு!
தனுஷின் கர படத்தின் ட்ரெய்லர் குறித்து படக்குழு பகிர்ந்த எக்ஸ் பதிவு:
#KaraTrailer is here 💣
▶️ https://t.co/rHWW05KxHt#KaraFromApril30
Directed by @vigneshraja89
Produced by @IshariKGanesh
A @gvprakash musical 🥁@dhanushkraja @VelsFilmIntl @velsmusicintl @kushmithaganesh @ThinkStudiosInd @RedGiantMovies_ @Inban_U @alfredprakash17… pic.twitter.com/nWc2eghvwh— Vels Film International (@VelsFilmIntl) April 19, 2026
தனுஷின் கர படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு:
இந்த படத்தில் தனுஷ் “கரசாமி” என்ற வேடத்தில் நடித்துள்ளார். அவரின் தந்தையாக கே.எஸ். ரவிக்குமார் நடித்துள்ளார். இப்படமானது ராமநாதபுரத்தில் 90களில் நடந்த கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, அதன் போராட்டங்களை பற்றிய கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் சுராஜ்வெஞ்சாரமூடு போலீஸ் அதிகாரியாகவும், நடிகர் தனுஷ் ஒரு திருடனாகவும் நடித்துள்ளார். தனது பண தேவைக்காக கொள்ளையடிக்கும் திருடனாக தனுஷ் நடித்துள்ளநிலையில், எதற்காக அவருக்கு பணம் தேவைப்படுகிறது என்பது மையப்படுத்தி இப்படமானது அமைந்துள்ளது. இதுமுழுவதுமாக ஆக்ஷன் திரில்லர் போன்ற கதையில் இல்லாமல், அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற சுவாரஸ்ய காட்சிகளுடன் இப்படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ரூ 250 கோடி இழப்பீடு.. மனைவி சங்கீதாவுக்கு விவாகரத்து கொடுக்க முடிவு செய்த விஜய்? – மகன் – மகளின் நிலை என்ன?
கர திரைப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்:
இந்த கர படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ், ஆடியோ லான்ச் மற்றும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஆகிவற்றை சேர்த்து மொத்தமாக ஒரே நிகழ்ச்சியாக, இன்று 2026 ஏப்ரல் 19ம் தேதியில் சென்னையில் படக்குழு நடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ், மமிதா பைஜூ மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். மேலும் சிறப்பு விருந்தினராகவும் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.