Kara Movie: தனுஷின் ‘கர’ படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? – அப்டேட் இதோ!
Kara Movie Second Single: போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள 54வது படம்தான் கர. இப்படமானது இந்த 2026ம் ஏப்ரல் மாதத்தில் வெளியாக காத்திருக்கும் நிலையில், இப்படத்தின் 2வது பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்து தனுஷ் அறிவித்துள்ளார்.

கர திரைப்படம்
நடிகர் தனுஷின்(Dhanush) நடிப்பில், இயக்கம் மற்றும் தயாரிப்பில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இவர் போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜாவுடன் (Vignesh Shivan) இணைந்துள்ள படம்தான் “கர” (Kara). இப்படம் தனுஷின் 54வது படமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2025ம் ஆண்டிலே ஷூட்டிங் தொடங்கியிருந்தது. இந்த படத்தில் தனுஷ் லீட் ஆக்ஷன் வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இவரின் நடிப்பில் 2வது வெளியாகவுள்ள தமிழ் படமாகும். இப்படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகிவந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துவருகிறது.
இப்படத்திற்கு இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் (GV. Prakash) இசையமைத்துள்ள நிலையில், முதல் சிங்கிள் வாயா ஏய் கரசாமி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா? கடைசி நேரத்தில் ஒத்திவைத்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு – ஏமாற்றத்தில் ரசிகர்கள்!
கர திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
8.4.26 is just 2 days away and so is the 2nd single of #Kara ♥️#KaraSecondSingle#KaraFromApril30
Directed by @vigneshraja89
Produced by @IshariKGanesh
A @gvprakash musical 🥁@dhanushkraja @VelsFilmIntl @velsmusicintl @kushmithaganesh @ThinkStudiosInd @RedGiantMovies_… pic.twitter.com/Bg7usSiTyr— Vels Film International (@VelsFilmIntl) April 6, 2026
கர திரைப்படத்தின் இரண்டவது பாடல் வரும் 2026 ஏப்ரல் 8ம் தேதியில் வெளியாகிறதாம். இப்பாடல் காதல் பாடலாக இருக்கும் என தெரிகிறது.
கர திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது:
நடிகர் தனுஷின் கர திரைப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இதில் தனுஷ் மற்றும் மமிதா பைஜுவுடன் நடிகர்கள் சுராஜ் வெஞ்சாரமூடு, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம், ப்ரித்வி பாண்டிராஜ் என பல்வேறு பிரபலன்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது முற்றிலும் ஆக்ஷன் மற்றும் அதிரடி திரில்லர் கதைக்களத்தில் அமைந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் கரசாமி என்ற வேடத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரசாந்தை பார்த்து பொறாமை.. அவரின் படங்களை வியந்து பார்த்திருக்கிறேன் – விஷால் பேச்சு!
இப்படமானது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் ஒளிப்படம் வெளியாக தயாராகியுள்ளது. அந்த விதத்தில் இப்படத்தின் ஆடியோ லான்ச் வரும் 2026 ஏப்ரல் 19ம் தேதியில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஏப்ரல் 22ம் தேதி அல்லது 23ம் தேதியில் கர படத்தின் ட்ரெய்லர் படக்குழு வெளியிடும் என கூறப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.