Thug Life : தக் லைஃப் பட ஆல்பத்தில் இணைந்த சின்மயி பாடிய ‘முத்த மழை’ பாடல்!
Chinmayi Muththa Mazhai Song : மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து, இன்றுவரையிலும் இணையத்தில் வைரலாகி வரும் பாடல் முத்தமழை. இந்த பாடலை பாடகி சின்மயி, இசை வெளியீட்டு விழாவின் போது பாடியிருந்தார். தற்போது இந்த பாடலும் தக் லைஃப் படத்தின் பாடல் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

தக் லைஃப் திரைப்படம்
நடிகர்கள் கமல் ஹாசன் (kamal Haasan) மற்றும் சிலம்பரசனின் (Silambarasan) நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தை கோலிவுட் சிறந்த இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் வெளியாகிய இந்த படத்தின் கதையை நடிகர் கமல் ஹாசன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தக் லைஃப் படமானது அதிரடி ஆக்ஷன் கதைக்களத்துடன் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் முன்னணி நாயகியாக நடிகை திரிஷா (Trisha) இணைந்து நடித்திருக்கிறார். இந்த படமானது 2025, ஜூன் 5ம் தேதியில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 2025, மே 24ம் தேதியில் சென்னையில் சாய்ராம் கல்லூரியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இப்படத்தில் பாடல்கள் நேரடியாக மேடையில் பாடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதில் பிரபல தமிழ் பாடகி சின்மயி (Chinmayi) “முத்த மழை” (Muththa Mazhai) என்ற பாடலை பாடி அசத்தியிருந்தார். ஆனால் இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் (A.R. Rahman) இசையமைப்பில், தக் லைஃப் படத்திற்குத் தமிழில், பாடகி தீ (Dhee) பாடியிருந்தார். அவர் அப்போது இல்லாத காரணத்தால், பாடகி சின்மயி தமிழில் முத்தமழை பாடலை மேடையில் பாடியிருந்தார். இந்த பாடலானது ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த பாடலும் தக் லைஃப் படத்தில் பாடல்கள் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
#ThugLifeRules#Thuglife#KamalHaasan #SilambarasanTR
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran @bagapath @trishtrashers @AishuL_ @AshokSelvan @abhiramiact @C_I_N_E_M_A_A #Nasser @manjrekarmahesh @TanikellaBharni #Vadivukkarasi… pic.twitter.com/UC1htARkPc— Raaj Kamal Films International (@RKFI) June 5, 2025
தக் லைஃப் முத்தமழை சின்மயி வெர்சன் :
தக் லைஃப் படத்தில் இந்த முத்தமழை என்ற பாடலை தமிழில் பிரபல பாடகி தீ பாடியிருந்தார். அவர் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வரமுடியாத காரணத்தால் , அந்த பாடலை பாடகி சின்மயி பாடியிருந்தார். அவரின் குரலில் வெளியான இப்பாடல் மக்கள் மத்தியில் மிகவும் ஈர்க்கப்பட்டது. மேலும் இவரின் குரலில் பாடப்பட்ட முத்தமழை பாடல் இணையத்தில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருந்தது.
இது தொடர்ந்து சமூக ஊடகங்களில் பாடகி சின்மயின் பாடலை தக் லைஃப் படத்தில் இணைக்கவேண்டும் என்று கூறிவந்தனர். இது தொடர்பாகப் பாடகி சின்மயியும், “தீ வருங்காலத்தில் 10 சின்மயி மற்றும் 100 ஷ்ரேயா கவுசலுக்கு இணையாக வருவார்” என்று கூறியிருந்தார். மேலும் ரசிகர்களின் ஆசைக்கு ஏற்ப தக் லைஃப் படக்குழு , சின்மயின் குரலில் வெளியான முத்தமழை பாடலை, தக் லைஃப் பாடல் தொகுப்பில் இணைந்துள்ளது. ஏற்கனவே தக் லைஃப் படத்திலிருந்து 9 பாடல்கள் வெளியாகியிருந்த நிலையில், 10வது பாடலாக சின்மயி பாடிய வெர்ஷன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.