கே ட்ராமா பிடிக்குமா உங்களுக்கு? தமிழில் காணக் கிடைக்கும் இந்த கேன் திஸ் லவ் பி ட்ரான்ஸ்லேட்டெட்? சீரிசை மிஸ் செய்யாதீர்கள்!
Can This Love Be Translated? Korean Web Series OTT Update: இந்திய சினிமா ரசிகர்களிடையே தற்போது படங்கள் மட்டும் இன்றி தொடர்ந்து இணையதள தொடர்களை பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக கே ட்ராமா என்று அழைக்கப்படும் கொரியன் தொடர்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கேன் திஸ் லவ் பி ட்ரான்ஸ்லேட்டெட்?
உலக அளவில் ஓடிடி கலாச்சாரம் தொடங்கிய பிறகு எந்த மொழியில் உருவாகும் படங்களையும் மக்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் மெகா சீரியலை மட்டுமே பார்த்துப் பழகிய மக்களுக்கு ஓடிடியின் வருகைக்குப் பிறகு இணையதள தொடர்களைப் பார்க்கும் பழக்கமும் அதிகரித்தது. அதன்படி இந்தியாவில் வாழும் மக்கள் மற்ற நாடுகளில் உருவாகும் தொடர்களை தொடர்ந்து பார்த்து வந்தனர். இதிலும் குறிப்பாக இந்திய மக்களிடையே கொரியன் மொழி தொடர்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த கொரிய கலாச்சாரத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர்கள் ஓடிடியில் தேடித் தேடி கொடிய நாடகங்களைப் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கொரியமொழியில் உருவாகி தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் தமிழில் காணக் கிடைக்கும் கேன் திஸ் லவ் பி ட்ரான்ஸ்லேட்டெட்? என்ற இணையதள தொடர் குறித்து தறொபோது பார்க்கலாம்.
இந்த கேன் திஸ் லவ் பி ட்ரான்ஸ்லேட்டெட்? தொடர் கொரிய மொழியில் உருவாகி இருந்தாலும் இந்திய மொழிகளில் காணக் கிடைக்கின்றது. அதிலும் குறிப்பாக தமிழில் இந்த தொடர் காணக் கிடைக்கின்றது. இந்த இணையதள தொடரில் நடிகர்கள் கிம் சியோன்-ஹோ, யூன்-ஜங் போ, சோட்டா ஃபுகுஷி, லீ யி-டம் மற்றும் சோய் வூ-பாடினார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்த கேன் திஸ் லவ் பி ட்ரான்ஸ்லேட்டெட்? தொடர் ரசிகர்களிடையே தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
கேன் திஸ் லவ் பி ட்ரான்ஸ்லேட்டெட் தொடரின் கதை என்ன?
சா முகி என்ற கொரிய நட்டைச் சேர்ந்த பெண் தனது முன்னாள் காதலனைப் பார்ப்பதற்காக ஜப்பானுக்கு வருகிறார். அங்கு அவரது காதலி என்ற ஒரு கர்பிணியை சந்தித்து அதிச்சி அடைகிறார். சா முகிக்கு கொரிய மொழி மட்டுமே தெரிந்ததால் அவருக்கு எதிர்பாராத விதமாக ஒரு கொரிய மொழி ட்ரான்ஸ்லேட்டரான ஜோ ஹோ ஜின் என்பவரின் அறிமுகம் கிடைக்கிறது. அவரிடம் தனது காதல் கதையை சொல்லும் சா முகி தான் ஒரு நடிகை என்பதையும் அவர் பெரிய அளவில் பிரபலமில்லாத அதிர்ஷ்டம் இல்லாதவல் என்றும் தெரிவிக்கிறார்.
Also Read… தொடர்ந்து ரஜினிகாந்தின் படங்களுக்கு இசையமைப்பதற்கு என்ன காரணம்? அனிருத் விளக்கம்
தொடர்ந்து இவர்கள் இருவரும் அதிக நேரத்தை செலவிட்ட பிறகு அவர்களின் வேலைகளை கவனித்து செல்கின்றனர். இருவரும் பிரிந்து சென்றாலும் ஒருவருக்கொருவர் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்து வந்தது. இப்படி இருக்கும் சூழலில் ஜாம்பி படம் ஒன்றில் நடித்த சா முகி மிகவும் பிரபலமான நடிகையாக மாறி விடுகிறார்.
அதனைத் தொடர்ந்து உலக அளவில் அவருக்கு ரசிகர்கள் அதிகரிக்கிறார்கள். தொடர்ந்து பல வாய்ப்புகள் கிடைக்கிறது. அப்படி ஒரு டிவி தொடரில் நடிக்க சா முகிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் நாயகன் ஜப்பானை சேர்ந்தவர் என்பதால் இவர்கள் இருவருக்கும் இடையே மொழிப் பெயர்பாளராக ஜோ ஹோ ஜின் வருகிறார். மீண்டும் சந்தித்துக்கொள்ளும் இவர்கள் இருவருக்கும் இடையே எப்படி காதல் மலர்ந்தது. இறுதியில் எப்படி சேர்ந்தார்கள் என்பதே இந்த தொடரின் கதை ஆகும்.
Also Read… 3 நாட்களில் தாய் கிழவி படம் வசூலித்தது எத்தனை கோடிகள்? அப்டேட் இதோ