பைக்கர் படம் இதுவரை வசூலித்தது இவ்வளவா? அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
Biker Movie Box Office Collection Update: தெலுங்கு சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ஷர்வானந்த். இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் பைக்கர். இந்தப் படம் இதுவரை எவ்வளவு வசூலித்துள்ளது என்று அப்டேட் வெளியாகி உள்ளது.

பைக்கர்
தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வந்தவர் நடிகர் ஷர்வானந்த். இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி அவ்வபோது தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களிலும் நடித்து இருந்தார். இந்த நிலையில் நடிகர் ஷர்வானந்த் நடிப்பில் கடந்த 3-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பைக்கர். இந்த பைக்கர் படம் பைக் ரேஸிங் போட்டியை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் ஷர்வானந்த் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவரது தந்தையாக நடிகர் ராஜசேகர் நடித்து இருந்தார். மேலும் நாயகியகியாக நடிகை மாளவிகா நாயர் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அதுல் குல்கர்னி, பிரம்மாஜி மற்றும் தயானந்த் ரெட்டி ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா இந்தப் படத்திற்கு இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பைக்கர் படம் இதுவரை வசூலித்தது இவ்வளவா?
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் வி. வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபட்டி ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். இந்த நிலையில் படம் இதுவரை எவ்வளவு வசூலித்து உள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி படம் இதுவரை ரூபாய் 43 கோடிகள் வசூலித்து உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பைக்கர் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Biker collects a gross of 43 CRORES WORLDWIDE 💥💥
Racing ahead with adrenaline and emotions that are loved by the audience ❤️
Book your tickets now for the SUMMER’S BUMPER FAMILY BLOCKBUSTER🔥🔥
🎟 https://t.co/p44bZA2nJP#BlockbusterBiker pic.twitter.com/Z7PixgpuQM— UV Creations (@UV_Creations) April 20, 2026
Also Read… அறிமுக இயக்குநரின் படத்தை தயாரிக்கும் தனுஷ் – வெளியான அறிவிப்பு!