வீட்டுதலப் பதவியை சரியாக செய்யாத துஷார்… சரமாரியக கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்ச்சி தொடங்கியதில் இருந்து முதல் வாரத்திற்கான வீட்டு தல டாஸ்கில் துஷார் வெற்றிப்பெற்றார். இதனைத் தொடர்ந்து வீட்டு தலையாக அவருக்கு தனி அறை வழங்கி இருந்தனர். இந்த நிலையில் அவர் சரியாக அந்த பணியை செய்யவில்லை என்று அவரது பதவி பறிக்கப்பட்டது.

வீட்டுதலப் பதவியை சரியாக செய்யாத துஷார்... சரமாரியக கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி

பிக்பாஸ்

Published: 

19 Oct 2025 16:06 PM

 IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சியில் முதல் வாரம் வீட்டு தலை டாஸ்கில் வெற்றிப் பெற்றார் துஷார். அதனைத் தொடர்ந்து வீட்டு தலைப் பதவியை துஷாருக்கு வழங்கிய பிக்பாஸ் அவருக்காக ஒரு மாஸ்டர் அறையை தனியாக வழங்கினார். வீட்டு தலைக்காக மட்டுமே அந்த அறை வழங்கப்பட்டு இருந்தது. மேலும் பல சலுகைகளும் அவருக்கு வழங்கப்பட்டு இருந்தது. இதுவரை கடந்த 8 சீசன்களில் வீட்டின் கேப்டனாக இருப்பவருக்கு நாமினேஷன் ஃப்ரீ மட்டுமே கிடைக்கும். மற்றபடி இந்த மாதிரியான சலுகைகள் எல்லாம் கிடைக்கவில்லை. இப்படி இருக்கும் சூழலில் இத்தனை சலுகைகள் கிடைத்தும் வீட்டு தல பணியை துஷார் சரியாக செய்யவில்லை என்று அவரிடம் இருந்து வீட்டு தல பணியை பறிப்பதாக பிக்பாஸ் அறிவித்தார். அதனைத்ட் தொடர்ந்து மற்ற ஹவுஸ் மேட்ஸ்கள் இருக்கும் அறையிலேயே அவரும் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இரண்டாவது வாரத்திற்கான வீட்டு தல டாஸ்க் கடந்த வாரம்  நடைப்பெற்றது. அதில் இறுதியாக கனி வீட்டு தல பதவியை வெற்றிப் பெற்றார். தொடர்ந்து முன்னதாக நாமினேஷன் ஃப்ரீ பாஸ் டாஸ்கில் கம்ருதின் வெற்றிப் பெற்றார். இதனைத் தொடர்ந்து வரும் வாரம் கம்ருதின் மற்றும் கனி இருவரையும் நாமினேஷன் ப்ராசசில் நாமினேட் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டுதலப் பதவியை சரியாக செய்யாத துஷார்:

இந்த நிலையில் வார இறுதியில் நடிகர் விஜய் சேதுபதி வரும் எபிசோடில் வாரம் முழுவதும் நடைப்பெறும் பிரச்னைகள் குறித்து பேசுவார். அதன்படி நேற்று முழுவதும் கம்ருதின் குறித்தும் அவர் வாரம் முழுவதும் போட்டியாளர்கள் இடையே ஏற்பட்ட பிரச்னை குறித்தும் நேற்று சனி கிழமை எபிசோடில் நடிகர் விஜய் சேதுபதி பேசி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று ஞாயிறு அன்று கடந்த வாரம் வீட்டு தல பதவி பறிபோனது குறித்து துஷாரிடம் பேசுகிறார். இது எவ்வளவு பெரிய தவறு என்பது குறித்தும், விஜய் சேதுபதி பேசுகிறார். அந்த வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா? படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன், பேசில் ஜோசஃப் நடிப்பில் வெளியானது அதிரடி படத்தின் டீசர்

40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த அழிந்துபோன பாம்பு இனம்
போர் சூழல்.. பதிலளிக்க தயாராக இருக்கும் ஈரான்..
மீண்டும் ஒரே மேடையில் ஏ.ஆர். ரஹ்மான் - விஜய் சேதுபதி.. எங்கு தெரியுமா?
அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்.. சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்கி குவித்த மக்கள்..