பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்கள் இவர்களா? இணையத்தில் வைரலாகும் பட்டியல்!

Bigg Boss Tamil Season 9 : தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு ரசிகர்கள் அதிகம் இருப்பது போல பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் அதிகம் இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பை அளித்து வருகின்றனர்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்கள் இவர்களா? இணையத்தில் வைரலாகும் பட்டியல்!

பிக்பாஸ்

Published: 

05 Sep 2025 17:03 PM

 IST

கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து சின்னத்திரையில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது மற்ற சேனல்களை விட அதிக டிஆர்பியை பெரும் நிகழ்ச்சியாக இது இருக்கும். இந்தி சினிமாவில் தற்போது 19-வது சீசன் தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. மேலும் தென்னிந்திய மொழிகளில் தற்போது 9-வது சீசனுக்கான அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தமிழில் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 9–  அறிவிப்பு கடந்த 1-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன்படி இந்த 9-வது சீசனுக்கான லோகோவை நிகழ்ச்சி குழு அறிமுகப்படுத்தியது. அந்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

மேலும் முன்னதாக விஜய் தொலைக்காட்சி நிறுவனர் அளித்தப் பேட்டி ஒன்றில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் மாதம் தொடங்கும் என்று தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்பது குறித்த யூகங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்… பிக்பாஸ் போட்டியாளர்கள் இவர்களா?

அந்த வகையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பெயர்கள் தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது. அதன்படி விஜய் டிவி பிரபலங்களான புவி அரசு, வினோத் பாபு, லக்ஷ்மி ப்ரியா, ஃபரீனா ஆசாத், ஷபானா மற்றும் நடிகர்கள் பால சரவணன், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலம் அரோரா ஆகியோர் இந்த சீசனில் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போதே இவர்கள் அனைவரும் இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… Sivakarthikeyan : அடிக்கிறோமோ இல்லையோ தடுக்குறோம்.. வித்யுத் ஜாம்வால் பற்றி சிவகார்த்திகேயன் பகிர்ந்த சம்பவம்!

பிக்பாஸ் குறித்து விஜய் தொலைக்காட்சி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… லோகா படம் உங்களுக்கு புடிச்சு இருக்கா? அப்போ மலையாளத்தில் மின்னல் முரளி படத்தை மிஸ் பண்ணிடாதீங்க