அப்போ பிக்பாஸில் இந்த வாரம் ஜெயிலுக்கு போறது இவங்க தானா? வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் நடைப்பெற்ற நிகழ்வுகளில் யார் சரியாக பங்கேற்கவில்லை என்று கேள்விக்கு வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் கருத்து தெரிவிக்கின்றனர். அதன்படி யார் இந்த வாரம் பிக்பாஸில் ஜெயிலுக்கு செல்ல உள்ளனர் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ்
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 47-வது நாள் நிறைவடைகிறது. பிக்பாஸில் ஒவ்வொரு சீசனிலும் வாரம் முழுவதும் நடைபெறும் டாஸ்க் மற்றும் வீட்டில் உள்ள வேலைகளில் சரியாக பங்கேற்காத அல்லது எண்டெர்டெய்மெண்ட் குறையாக உள்ள போட்டியாளர்களை மற்ற போட்டியாளர்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அந்த லிஸ்டில் அதிக வாக்குகளைப் பெற்ற போட்டியாளர்கள் இரண்டு நபர்களை தேர்வு செய்து பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஜெயிலுக்கு செல்லவேண்டும். அடுத்த அறிவிப்பு வரும் வரை அவர்கள் ஜெயிலில் தான் இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு வாரமும் இப்படி ஜெயிலுக்கு செல்லும் போட்டியாளர்கள் நேரடியாக அடுத்த வாரத்திற்கான நாமினேஷனில் இடம் பிடிப்பதும் வழக்கமாக இருந்து வந்தது. தொடர்ந்து அந்த ஜெயிலில் இருக்கும் போட்டியாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 7-வது வாரம் முடிவடைய உள்ளது. அதன்படி இந்த வாரம் வீட்டில் வழங்கப்பட்ட டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் 3 அணிகளாக பிரிந்து செயல்பட வேண்டு என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் அதிகமாக பாய்ண்ட்ஸ் எடுக்கும் அணியில் உள்ள அனைவரும் அடுத்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள முடியும் என்று அறிவித்து இருந்தது.
அப்போ பிக்பாஸில் இந்த வாரம் ஜெயிலுக்கு போறது இவங்க தானா?
அதன்படி இந்த போட்டியில் வாரம் முழுவதும் சிறப்பாக செயல்படாத போட்டியாளர்கள் இருவரை பிக்பாஸ் தேர்ந்தெடுத்து சொல்ல சொல்கிறார். அதில் அதிகப்படியான நபர்கள் கிட்சென் அணியில் இருந்த சாண்ட்ரா மற்றும் திவ்யா பெயரை அதிகப்படியான நபர்கள் கூறுவது போல அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் இவர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஜெயிலில் செல்வார்கள் என்று தெரிகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day47 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/e2Poy0ZMTY
— Vijay Television (@vijaytelevision) November 21, 2025