பிக்பாஸில் வாட்டர்மெலன் திவாகர் சொன்ன விசயம் – கடுப்பான போட்டியாளர்கள்

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்று இரண்டாவது நாளிற்கான புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் பல சர்ச்சையான விசயங்களை பேசி வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரின் எதிர்ப்பையும் வாட்டர்மெலன் திவாகர் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.

பிக்பாஸில் வாட்டர்மெலன் திவாகர் சொன்ன விசயம் - கடுப்பான போட்டியாளர்கள்

பிக்பாஸ்

Updated On: 

07 Oct 2025 14:08 PM

 IST

கடந்த 5-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய அன்றே வீட்டில் சர்ச்சைகள் கிளம்பியது. மேலும் இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் போட்டியாளர்கள் யார் என்று தெரிந்ததும் மக்களிடையே அதிருப்தி நிலவியது. இது குறித்து ரசிகர்கள் மீம்ஸ்களை வெளியிட்டு தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி சில நாட்களுக்குப் பிறகு போட்டியாளர்களின் குணத்தை பார்த்தப் பிறகே விமர்சிக்கத் தொடங்குவார்கள். ஆனால் இந்த சீசனில் போட்டியாளர்களாக உள்ளே அனுப்பப்பட்டவர்களின் பட்டியலைப் பார்த்த போதே ரசிகர்கள் தங்களது கடுப்பை வெளிபடுத்த தொடங்கிவிட்டனர். இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளத்தில் ரசிகர்களிடையே கோமாளிகளாக காட்சியளித்தப் பலர் இந்த சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

மேலும் மற்ற பிரபலங்களை விட விஜய் தொலைக்காட்சியில் சீரியல்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றப் பலர் இந்தப் போட்டியில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் வீட்டில் அரசல் புரசலாக இருந்த சண்டை தற்போது இன்று மிகப் பெரியதாக வெடித்துள்ளது. வாட்டர் மெலன் திவாகர் மீது மற்ற போட்டியாளர்களுக்கு அதிருப்தி அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் நேற்று குறட்டை விடுவது குறித்து பிரவீன் மற்றும் திவாகர் இடையே பிரச்னை ஏற்பட்டது.

ஒட்டுமொத்த போட்டியாளர்களின் எதிர்ப்பை பெற்ற திவாகர்:

இந்த நிலையில் இன்றை நிகழ்ச்சிக்கான இரண்டு புரோமோ வீடியோக்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் திவாகர் ஒரு விவாதத்தில் ரம்யா ஜோவை பார்த்து படித்து இருந்தால் தான் புரிந்துகொள்ளும் திரன் இருக்கும் என்று கூறுகிறார். இதனால் மனமுடைந்த ரம்யா ஜோ அழுக திவாகரிடம் மற்ற போட்டியாளர்கள் எதிர்த்து பேசுகிறார்கள்.

அதில் பேச்சு முற்றி எஃப் ஜே மற்றும் கம்ருதின் இருவரும் திவாகரை அடிக்க கை ஓங்குகிறார்கள். ஆரம்பித்த இரண்டாவது நாளே இப்படி வீட்டில் பிரச்னை வெடித்த நிலையில் இன்னும் 100 நாட்களுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read… டியூட் படத்தின் தமிழ் நாட்டு வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மாஸ்க் படத்திலிருந்து வெளியானது கண்ணு முழி பாடல் வீடியோ!