குத்துனது சரியா? தப்பா? கம்ருதினை லெஃப்ட் ரைட் வாங்கும் விஜய் சேதுபதி – வைரலாகும் பிக்பாஸ் தமிழ் வீடியோ!

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வாரம் முழுவதும் நடைபெறும் சம்பவங்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி வார இறுதியில் பேசுவது வழக்கம். இந்த நிலையில் இந்த வாரம் கம்ருதின் குறித்து விஜய் சேதுபதி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குத்துனது சரியா? தப்பா? கம்ருதினை லெஃப்ட் ரைட் வாங்கும் விஜய் சேதுபதி - வைரலாகும் பிக்பாஸ் தமிழ் வீடியோ!

பிக்பாஸ் தமிழ்

Published: 

18 Oct 2025 17:22 PM

 IST

பிக்பாஸ் தமிழ் (Bigg Boss Tamil) தொடங்கியதில் இருந்து வீட்டில் உள்ள போட்டிகள் மிகவும் கடுமையானதாக இருக்கும். தொடர்ந்து வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இடையே போட்டி நடத்தப்பட்டு வீட்டின் கேப்டன் அறிவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு நாமினேஷனில் இருந்து விலக்கு அளிப்பப்படுவது மட்டும் இன்றி அவர்கள் மொத்தம் இரண்டு வாரம் பிக்பாஸ் வீட்டில் இருப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் இதன் காரணமாக பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக ஆவதற்கு தொடர்ந்து போட்டியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 5-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த சீசனில் கேப்டனை வீட்டு தல என்று ஒரு புது பெயரை வைத்தது மட்டும் இன்றி வீட்டு தலையாக வருவபர்களுக்கு தனி அறை அளிக்கப்படுகின்றது. பல சலுகைகளுக் கிடைக்கப்படுகின்றது.

அதன்படி இந்த 9-வது சீசனில் பிக்பாஸ் வீடு வீட்டு தல ரூம், டீலக்ஸ் டீம், பிக்பாஸ் டீம் என பிரித்துள்ளார். இதில் பிக்பாஸ் டீம் மற்றும் டீலக்ஸ் டீம் இருவருக்கும் இடையே போட்டி அதிகமாக நிலவி வருகின்றது. மேலும் சண்டைகளும் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல் வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரமே வீட்டு தலையாக துஷார் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் வீட்டில் அவருக்கு கொடுத்த பொறுப்புகளை சரியாக செய்யவில்லை என்று வாரம் முடிவதற்குள் அவரின் பதவி பறிக்கப்படுவதாக பிக்பாஸ் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து வீட்டு தல அறையை காலி செய்துவிட்டு பிக்பாஸ் அறைக்குள் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குத்துனது சரியா? தப்பா? – விஜய் சேதுபதியின் அதிரடி கேள்விகள்:

இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டு தல பதவிக்கான போட்டி நடைப்பெற்றது. அதில் கம்ருதின், கனி மற்றும் சபரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் கம்ருதின் முதலாவது ஆளாக வெளியேற்றப்பட்டார். இதன் காரணமாக அவர் வீட்டில் உள்ளவர்களிடையே பல நேரங்களில் தவறாக நடந்துக்கொண்டுள்ளார். இதுகுறித்து இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கம்ருதினிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… விஷ்ணு விஷாலின் ஆர்யன் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம் – வைரலாகும் போஸ்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… திரையரங்குகளில் வெற்றிகரமாக 50 நாட்களைக் கடந்தது லோகா சாப்டர் 1 சந்திரா – உற்சாகத்தில் படக்குழு