டார்க் காமெடியில் ஒரு சீரியல் கில்லர் கதை… இந்த மரணமாஸ் படத்தை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்

Maranamaas Movie OTT Update: மலையாள சினிமாவில் டார்க் காமெடி பாணியில் சீரியல் கில்லர் கதையில் வெளியான படம் மரணமாஸ். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

டார்க் காமெடியில் ஒரு சீரியல் கில்லர் கதை... இந்த மரணமாஸ் படத்தை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்

மரணமாஸ்

Published: 

30 Dec 2025 22:36 PM

 IST

மலையாள சினிமாவில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மரணமாஸ். டார்க் காமெடி பாணியில் சீரியல் கில்லர் கதையில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் சிவபிரசாத் இயக்கி இருந்த நிலையில் சிஜு சன்னி மற்றும் சிவபிரசாத் இருவரும் திரைக்கதை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் பேசில் ஜோசஃப் நாயகனாக நடித்து உள்ள நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் அனிஷ்மா அனில்குமார்,
சிஜு சன்னி, பாபு ஆண்டனி, சுரேஷ் கிருஷ்ணா, ராஜேஷ் மாதவன், ஜோமன் ஜோதிர், பூஜா மோகன்ராஜ், புளியணம் பவுலோஸ், தீரஜ் டெனி, அலெக்சாண்டர் பிரசாந்த், சுனில் சுகதா, ஜியோ பேபி, விஜய் அஜித், குடச்சநாடு கனகம், நதிரா மெஹ்ரின், எம்.ஆர்.கோபகுமார், சந்தோஷ் கீழத்தூர், நாக சைரந்திரி, டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான டொவினோ தாமஸ் புரொடக்ஷன்ஸ், ரஃபேல் புரொடக்ஷன் மற்றும் வேர்ல்ட் வைட் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் டொவினோ தாமஸ், டிங்ஸ்டன் தாமஸ், ரஃபேல் பொழோலிபரம்பில், தன்சீர் சலாம் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜேகே இசையமைத்து இருந்தார்.

பேசிலின் இந்த மரணமாஸ் படத்தை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்:

படத்தின் தொடக்கத்திலேயே ஒரு சீரியல் கில்லர் குறித்த செய்தி ஒளிபரப்பாகும். அதனைத் தொடர்ந்து யார் அந்த சைக்கோ கொலையாளி என்பது குறித்தும் காட்டப்படும். அந்த கொலைகாரன் வயது முதிர்ந்தவர்களை தேர்வு செய்து அவர்களை கொலை செய்து வாயை கிழித்து அவர்களின் வாயில் வாழைப்பழத்தை வைக்கும் பழக்கம் உடையவராக இருக்கிறார்.

Also Read… டிக்கெட் டூ ஃபினாலே 2 டாஸ்கில் சண்டையிடும் கம்ருதின் மற்றும் பார்வதி… வைரலாகும் பதிவு

சைக்கோ கொலையாளி யார் என்பது வெளிப்படையாக காட்டியபிறகு அந்த ஊரில் சேட்டை செய்துக்கொண்டு இருக்கும் பேசிலை சைக்கோ கொலையாளி என்று கைது செய்து பிறகு வெளியே விடுகின்றனர். ஆனால் அவர் மீது சந்தேகம் ஏற்படுவது போலவே தொடர்ந்து சூழல்கள் அமைந்து வருகின்றது. இறுதியில் சைக்கோ கொலைகாரன் யார் என்பதை அனைவரும் எப்படி அறிந்துகொண்டார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… ரஜினிகாந்தை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? வைரலாகும் தகவல்

10வது மாடியில் இருந்து விழுந்த நபர்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆச்சரியம்..
60வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான் கான்.. அவரது ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்..
விசா நேர்காணல்களை ரத்து செய்த அமெரிக்கா - இந்தியா கவலை
பாகிஸ்தானில் பணக்கார இந்து பெண்.. யார் இவர்? நிகர மதிப்பு என்ன தெரியுமா?