ஆக்ஷன் த்ரில்லர் நிறைந்த இந்த அய்யப்பனும் கோஷியும் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட் இதோ
Ayyappanum Koshiyum Movie OTT Update : மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் அய்யப்பனும் கோஷியும். இந்தப் படம் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அய்யப்பனும் கோஷியும்
சினிமாவில் பலதரப்பட்ட குணங்களை மையமாக வைத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி மலையாள சினிமாவில் மனிதர்களின் குணங்களை வைத்து அதிக அளவில் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அதில் ஒன்று ஈகோ. அந்த வகையில் ஒரு மனிதனின் ஈகோவை டச் செய்துவிட்டால் அவர்கள் எந்த அளவிற்கு மாறுவார்கள் என்பது படத்தில் காட்டப்பட்டு தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த மாதிரியான கதையை மையமாக வைத்து மலையாள சினிமாவில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் அய்யப்பனும் கோஷியும். இயக்குநர் சச்சி இந்த அய்யப்பனும் கோஷியும் படத்தினை எழுதி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் பிஜு மேனன் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அனில் நெடுமங்காட், கௌரி நந்தா, அண்ணா ராஜன், ரஞ்சித், கோட்டயம் ரமேஷ், அனு மோகன், தன்யா அனன்யா, அஜி ஜான், நந்து ஆனந்த், சாபுமோன் அப்துசமத், அலன்சியர் லே லோபஸ், பழனி சுவாமி, தீபு ஜி பணிக்கர், ஜானி ஆண்டனி, ஷாஜு ஸ்ரீதர், DYSP சலீஷ் என்.சங்கரன், பென்சி மேத்யூஸ், ரெனித் இளமடு, வினோத் தாமஸ், வினீத் தட்டில் டேவிட், முஹம்மது முஸ்தபா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
அய்யப்பனும் கோஷியும் படத்தின் கதை என்ன?
இந்திய ராணுவத்தில் முன்னாள் ஹவில்தாராகப் பணியாற்றிய கோஷி குரியன் (பிருத்விராஜ் சுகுமாரன்) ஆர்மி கேண்டினில் இருந்து மதுபானங்களை வாங்கிக்கொண்டு தனது ஓட்டுனருடன் காரில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது காவல் துறையினர் செக்கிங்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கோஷியின் காரை நிறுத்தி விசாரிக்கின்றனார்.
அப்போது காவல்துறையினரிடம் கோஷிக்கு தகறாரு ஏற்படுகின்றது. இந்த சூழலில் காவல்துறை அதிகாரியக இருக்கும் அய்யபன் (பிஜு மேனன்) இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அது முற்றி கைகலப்பாக கோஷி அய்யப்பனின் வேலையை கெடுக்கும் விதமாக பல விசயங்களை செய்கிறார்.
தொடர்ந்து இருவரும் மாறிம் மாறி அவர்களின் வாழ்க்கையில் எப்படி சண்டையிட்டுக்கொள்கிறார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… மீசையை முறுக்கு 2 படம் குறித்து முக்கிய அப்டேட் சொன்ன ஆதி – வைரலாகும் வீடியோ