ஜன நாயகன் ஆடியோ லாஞ்சில் இந்த பிரபலங்கள் எல்லாம் பங்கேற்பார்களா? வைரலாகும் தகவல்

Jana Nayagan Movie Audio Launch Update: தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. இதில் யார் யார் எல்லாம் கலந்துகொள்வார்கள் என்பது குறித்த அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன் ஆடியோ லாஞ்சில் இந்த பிரபலங்கள் எல்லாம் பங்கேற்பார்களா? வைரலாகும் தகவல்

ஜன நாயகன்

Published: 

01 Dec 2025 21:24 PM

 IST

தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாக உள்ள படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் முன்னதாக படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியல் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பாப்பை அதிகரித்தது. மேலும் இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே இணைந்தது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. தொடர்ந்து இந்தப் படத்தில் இந்தி சினிமாவின் பிரபல நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். முன்னதாக இவர் அனிமல் படத்தில் வில்லனாக கலக்கிய போதே தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை பிரபல இயக்குநர் எச்.வினோத் இயக்கி உள்ள நிலையில் படம் பொலிட்டிகள் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்‌ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் வெங்கட் கே. நாராயணா, ஜெகதீஷ் பழனிசாமி லோஹித் என்.கே. ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து முன்னதாக தளபதி கச்சேரி பாடல் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள்:

இந்த நிலையில் இந்த ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 27-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இது நடிகர் விஜயின் இறுதிப் படம் என்பதால் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பலர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்படி இந்த விழாவில் இயக்குநர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோர் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… 15 ஆண்டுகளை நிறைவு செய்த மைனா படம்… டி இமான் வெளியிட்ட பதிவு

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் படப்பிடிப்பு – அப்டேட் இதோ

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா.. பலருக்கும் தெரியாத அட்டகாசமான அம்சங்கள்...
இனி சபரிமலையில் புலாவ், சாம்பார் இல்லை... அன்னதானத்தில் அதிரடி மாற்றம்!
AI மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்.. முழு பணத்தையும் ரீஃபண்ட் செய்த ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்..
ராமர் கோயிலில் ஏற்றப்பட்ட கொடி.. அதன் சிறப்பம்சங்கள் என்ன?