Athrvaa: முதல் காட்சியே அதுதான்.. அது மிகவும் சங்கடமாக இருந்தது- அதர்வா ஓபன் டாக்!

Atharvaa About Kanithan Movie First-Day Shoot: தமிழில் பிரபல இளம் கதாநாயகனாக கலக்கிவருபவர் அதர்வா. இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து பல படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், கணிதன் படத்தில் முதல் காட்சியிலே நடிக்க கஷ்டப்பட்டது குறித்து மனம் திறந்துள்ளார்.

Athrvaa: முதல் காட்சியே அதுதான்.. அது மிகவும் சங்கடமாக இருந்தது- அதர்வா ஓபன் டாக்!

அதர்வா

Published: 

09 Feb 2026 08:22 AM

 IST

தமிழில் பிரபல 90ஸ் நாயகனாக இருந்திவந்தவர் மறைந்த நடிகர் முரளி (Murali). இவருக்கு தமிழில் பல ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. அந்த வகையில் இவரின் மூத்த மகனான அதர்வா முரளி (Athrvaa Murali) தற்போது சினிமாவில் பல படங்களில் நாயகனாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் படங்கள் தயாராகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக பராசக்தி (Parasakthi) படம் வெளியானது. இதில் நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) தம்பி வேடத்தில் இவர் நடித்திருந்தார். இவரின் கதாபாத்திரத்திற்கு இப்படத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. நடிகர் அதர்வா, கடந்த 2010ம் ஆண்டில் வெளியான பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக நுழைந்தார். இவருக்கு முதல் படமே ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டது. இதில் சமந்தாவுடன் ஜோடியாக இணைந்து நடித்திருந்தார். இதையடுத்து முப்பொழுதும் உன் கற்பனை, பரதேசி, இரும்பு குதிரை, சண்டி வீரன் உள்ளிட்ட பல்வேறு படங்ககளில் நடித்துவந்தார்.

அந்த விதத்தில் தற்போதும் இவர் ஹீரோவாக மாறுபட்ட கதைங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய அதர்வா, கணிதன் (Kanithan) படத்தின் முதல் ஷூட்டிங்கின்போது நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரூ500ல் இருந்த மகிழ்ச்சி.. கோடியில் சம்பளம் வாங்கும்போது இல்லை – அனிருத் பேச்சு!

நடிகர் அதர்வா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு :

கணிதன் படத்தின் முதல் நாள் ஷூட்டிங் குறித்து பகிர்ந்து அதர்வா:

அந்த நேர்காணலில் பேசிய அதர்வா, “கணிதன் பட முதல் நாள் ஷூட்டிங்கில், இதை யாரிடமும் நான் சொல்லியதில்லை. அந்த படத்தின் ஷூட்டிங்கில் அப்போதுதான் முதல் முறையாக கேத்ரினை சந்தித்தேன். இதுவரைக்கும் நாங்கள் எங்கேயும் பேசிக்கொண்டதில்லை. தற்போது மிகவும் நெருக்கமான நண்பர். முதல் முறையாக அவரை சந்திக்கும்போது, கணிதன் படம்தான் அவருக்கு முதல் தமிழ் படம். முதலில் கேத்ரினுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தனர், அவரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.

இதையும் படிங்க: நான் சரியான பாதையில் செல்கிறேன் என்பதை அது உறுதிசெய்கிறது – அஜித் குமார் பேச்சு!

மேலும் முதல் நாள் ஷூட்டிங்கிலே எனக்கும் கேத்ரினுக்கும் முத்தக்காட்சிதான் வைத்தார்கள். எனக்கும் சரி, கேத்ரினுக்கும் சரி பயங்கர ஷாக். எனக்கு அது மிகவும் சங்கடமாக இருந்தது. அப்போது உடனே கேத்ரின் என்னிடம், “என்னை தொட மட்டும்தான் செய்யணும், கிஸ் பண்ண கூடாது” என கூறினார். நானும் சரி என சொல்லிட்டேன். அப்போது அந்த படத்தின் ஷூட்டிங்கின்போது எனக்கு, நான் பின்வாங்கியது போல இருந்தது” என அவர் அதில் தெரிவித்திருந்தார்.

150 கோடி வசூல்.. ட்ரெண்டிங்கில் இருக்கும் சர்வம் மாய..
லெஜெண்ட் சரவணனின் புதிய படம்.. வெளியான லீடர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
சென்னையில் தீவிரமாக பரவும் பறவைக் காய்ச்சல் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மோடிஜி என் சகோதரனை மீட்டுத்தாருங்கள் - நடிகை ஜெலினா ஜெட்லி கண்ணீர் மல்க உருக்கம்