படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுக்க முடியாது – 6 வருடங்களை கடந்தது அசுரன் படம்

6 Years Of Asuran Movie : நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் அசுரன். இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 6 வருடங்களைக் கடந்துள்ள நிலையில் படக்குழு இதனை கொண்டாடி வருகின்றது.

படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுக்க முடியாது - 6 வருடங்களை கடந்தது அசுரன் படம்

அசுரன் படம்

Published: 

04 Oct 2025 19:50 PM

 IST

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான பொல்லாதவன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் இயக்குநர் வெற்றிமாறன். இவர்களின் கூட்டணியில் வெளியான முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் அசுரன் படம் கடந்த 4-ம் தேதி அக்டோபர் மாதம் 2019-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் இன்றுடன் 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனைப் படக்குழுவினரும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்தப் படத்தில் வரும் முக்கியமான வசங்களை ரசிகர்கள் ரீல்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் மஞ்சு வாரியர், டீஜேய் அருணாசலம், கென் கருணாஸ், பசுபதி, அம்மு அபிராமி, பிரகாஷ் ராஜ், சுப்பிரமணிய சிவா, பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், பாலா ஹாசன், பவன், தமிழ், எஸ்.ஆர்.பாண்டியன்,  ஏ. வெங்கடேஷ், வேல்ராஜ், நிதிஷ் வீரா, சென்ட்ராயன், மூணார் ரமேஷ் என பலரும் இந்தப் படத்தின் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

6 ஆண்டுகளைக் கடந்தது அசுரன் படம்:

தயாரிப்பாளர் கலைபுலி தாணு இந்தப் படத்தை வி கிரியேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இந்தப் படத்தை தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் ஒடுக்கப்படும் மக்களுக்கு கோவம் வந்தால் என்ன நடக்கும் என்பதை இயக்குநர் வெற்றிமாறன் காட்டியிருப்பார்.

இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் வரும் காடு இருந்தா எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ, ,ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது சிதம்பரம் என்று நடிகர் தனுஷ் பேசும் வசனம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… சிரஞ்சீவி – நயன்தாரா படத்தில் வில்லனாகும் பிரலப மலையாள நடிகர்?

அசுரன் படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் குமார் பேசியது:

Also Read… சினிமாவில் புது அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன் – வைரலாகும் தகவல்