அசோக் செல்வன் நடிப்பில் மீண்டும் ஒரு ஃபீல் குட் படம் – வைரலாகும் பேட்டி!

Actor Ashok Selvan New Movie Update: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் குறித்த அப்டேட் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அசோக் செல்வன் நடிப்பில் மீண்டும் ஒரு ஃபீல் குட் படம் - வைரலாகும் பேட்டி!

அசோக் செல்வன்

Published: 

21 Feb 2026 19:03 PM

 IST

தமிழ் சினிமாவில் மக்களிடையே வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. 2013-ம் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன இவர் 13 ஆண்டுகளுக்கு பிறகு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து ஒரே மாதிரியான படங்களில் நடிக்காமல் நடிகர் அசோக் செல்வன் பல விதமான ஜானர்களில் நடித்து வருகிறார். ஃபீல் குட், காமெடி, ரொமான்ஸ், த்ரில்லர் என நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதில் அதிக அளவில் மக்களிடையே பிரபலமான படங்கள் என்பது இவரது நடிப்பில் வெளியான ஃபீல் குட் படங்கள் என்றே சொல்ல வேண்டும்.

அந்த வகையில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே மற்றும் நித்தம் ஒரு வானம் ஆகியப் படங்கள் ஃபீல் குட் கதைகளை மையமாக வைத்து வெளியாகி உள்ளது. அதன்படி இந்த இரண்டு படங்களுமே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் அவரிடம் அடுத்து எப்போது உங்களது நடிப்பில் ஃபீல் குட் படங்கள் வெளியாகும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அசோக் செல்வன் நடிப்பில் மீண்டும் ஒரு ஃபீல் குட் படம்:

அதற்கு பதிலளித்து பேசிய நடிகர் அசோக் செல்வன் கூறியதாவது, என்னுடைய நடிப்பில் உருவாகி உள்ள அடுத்தப் படம் ஒரு ஃபீல் குட் கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளது. பெயரிடப்படாத அந்தப் படம் இந்த ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகிறது. ஸ்கிரிப்டை போர் தொழில் மற்றும் கர படத்தின் புகழ் இயக்குனர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது. மேலும் அந்தப் படத்தை நானே தயாரித்து உள்ளேன் என்றும் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.

Also  Read… Tamannaah Bhatia: ஒரு சோப்பு விளம்பரத்தில் நடிக்க இத்தனை கோடியா? – எகிறும் தமன்னாவின் சம்பளம்!

இணையத்தில் வைரலாகும் அசோக் செல்வன் பேச்சு:

Also  Read… Vijay Sethupathi: எனது வாழ்நாளிலே அப்படியொரு காட்சியில் நடிப்பேன்னு நினைக்கல- விஜய் சேதுபதி ஓபன் டாக்!

ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!